psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ருண விமோசன ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம் தமிழில்

🕉️ ஸ்ரீ நரசிம்மர்
Translations

🎵 Watch/Listen on YouTube


narasimhar
1)

வானவராம் தேவர்களின் வேண்டுதலை ஏற்று

தூண்பிளந்து அரசவையில் தோன்றினாயே அன்று !
 
மகா வீரன் ஆனவனே! ஸ்ரீ நரசிம்மா!  (2)
 
உனை வணங்குகிறேன்
கடன்கள் தீர்த்துக் காத்தருள்வாயே! (2)
 
2)
அரவணைப்பார் இடப்புறமாய் திருமகளும் உன்னை
வரமளித்து ஆதரிப்பாய் உன் பக்தர்கள் தன்னை!
 
மகா வீரன் ஆனவனே! ஸ்ரீ நரசிம்மா!  (2)
 
உனை வணங்குகிறேன்
கடன்கள் தீர்த்துக் காத்தருள்வாயே! (2)
 
3)
 
அங்கத்திலே மாலையாக இரணியனின் குடலே!
சங்கு, சக்கரம் ஆயுதமாய் ஏந்திடுமே கரமே!
 
மகா வீரன் ஆனவனே! ஸ்ரீ நரசிம்மா!  (2)
 
உனை வணங்குகிறேன்
கடன்கள் தீர்த்துக் காத்தருள்வாயே! (2)
 
4)
பாவமெலாம் தீர்ந்திடுமே உனைநினைக்கும் போதே
நாகமதன் விஷத்தையுமே முறிப்பவனும் நீயே
 
மகா வீரன் ஆனவனே! ஸ்ரீ நரசிம்மா!  (2)
 
உனை வணங்குகிறேன்
கடன்கள் தீர்த்துக் காத்தருள்வாயே! (2)
 
5)
 
ஓங்கிஒலி யாகும்உந்தன் சிம்மக் குரலிலே
நீங்கிடுமே அச்சமது எட்டு திக்குமே!
 
மகா வீரன் ஆனவனே! ஸ்ரீ நரசிம்மா!  (2)
 
உனை வணங்குகிறேன்
கடன்கள் தீர்த்துக் காத்தருள்வாயே! (2)
 
6)
ப்ரகலாத வரதன் ஆன லட்சுமி நாதனே
ப்ரபஞ்ச சுக அதிபதியை  வென்ற தீரனே!
 
மகா வீரன் ஆனவனே! ஸ்ரீ நரசிம்மா!  (2)
 
உனை வணங்குகிறேன்
கடன்கள் தீர்த்துக் காத்தருள்வாயே! (2)
 
7)
கோள்களதன் கோரமான பிடியில்சிக்கி உன்
தாள்பணிந்த பக்தர்களை மீட்டெடுக்கும் தேவே!
 
மகா வீரன் ஆனவனே! ஸ்ரீ நரசிம்மா!  (2)
 
உனை வணங்குகிறேன்
கடன்கள் தீர்த்துக் காத்தருள்வாயே! (2)
 
8)
நான்மறையின், வேள்விகளின் நாயகனே தேவா!
நான்முகனும்,ருத்திரனும் பணிந்து ஏற்றும் நாதா!
 
மகா வீரன் ஆனவனே! ஸ்ரீ நரசிம்மா!  (2)
 
உனை வணங்குகிறேன்
கடன்கள் தீர்த்துக் காத்தருள்வாயே! (2)
 
9)
கடன்கள் தீர்க்கும் துதியிதனை படித்திடுவார்க்கு 
உடனடியாய் கடன்கள் தீர்ந்து செல்வம் சேருமே