psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

தன்னுள்ளே ஆழ்ந்திருக்கும்

🕉️ குரு
Originals

🎵 Watch/Listen on YouTube


 

தன்னுள்ளே ஆழ்ந்திருக்கும் திருவுருவே !

தட்சிணா மூர்த்தியே ! ஸ்ரீகுருவே !

தென்முகம் நோக்கும் சிவ உருவே !

தென்முகம் நோக்கும் சிவ உருவே !

சின்மயம் காட்டும் திருவருளே !

(தன்னுள்ளே )

வயதிலே முதிர்ந்த முனியோர்கள்

சீடராய் சூழ்ந்தார் உனைச்சுற்றி !

பொங்கிடும் இளமையில் நீயிருப்பாய்

அவருக்கு குருவாய் வழிகாட்டி !

என்னையும் சீடனாய் தானேற்று..

தந்திடுவாயோ திருக்காட்சி !

(தன்னுள்ளே) 

விழுதுகள் மிகுந்த ஆலமரம்

அதனடி உந்தன் எழில் பீடம் 

ஞானத்தின் விழுதுகள் தனை விரித்து..

ஞாலத்தில் அறிவின் ஒளியேற்று..!

ஒருசொல் கூட பேசாமல்..

மோனத்தினாலே கற்பித்து…

 

(தன்னுள்ளே )