கோடி மலர்களாலே

ஆல்பம்: ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா !

பாடியவர்: திரு. உன்னிகிருஷ்ணன்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————– கோடி மலர்களாலே..- மலர் பாத பூஜை செய்வோம் ! காமகோடி குருவே ! – உன் நாமம் சொல்லி நெகிழ்வோம் ! சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமி ! சந்ததம் சங்கரம் நமஸ்மராமி ! (கோடி மலர்) சரணம் – 1 நடந்து கனிந்த பாதம் – அதிலே கமலம் ஏற்றி வைத்தோம் ! அள்ளித் செண்டினாலே – மெள்ள மெள்ள வருடிக் கொடுதோம் ! நின் பொறுமை நிலையைக் கண்டே – எம் மேனி சிலிர்த்து நின்றோம் ! உன் பெருமை பாடிக் கொண்டே – எம் உள்ளம் குளிர்ந்து கொண்டோம் ! சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமி ! சந்ததம் சங்கரம் நமஸ்மராமி ! சரணம் – 2 தூபம், தீபம் காட்டி – எங்கள் பாபம் தீர்த்துக் கொண்டோம் ! வேத மறைகள் ஓதி – எங்கள் வினைகள் தீர்த்துக் கொண்டோம் ! கருணை வடியும் உந்தன் – திரு முகத்தைப் பார்த்து நின்றோம் ! மலர்கள் வாசம் தாண்டி தெய்வீக வாசம் கண்டோம் ! சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமி ! சந்ததம் சங்கரம் நமஸ்மராமி !