எந்தப் புறம் சென்றாலும்

ஆல்பம்: ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா !

பாடியவர்: திருமதி. சவிதா ஸ்ரீராம்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

இந்தியாவில், இந்த CD-யைக் ‘கூரியரி’ல் பெற..மின்னஞ்சல் (email ) செய்யவும்…info@psdprasad-music.com ————————————————————————– எந்தப் புறம் சென்றாலும் சோதனையா? எந்தப் புறம் போவதென தோணலையா? காஞ்சிபுரம் போகலாம் வாருங்கள் ! – அந்த மாமுனி தரிசனத்தைப் பாருங்கள் ! (எந்தப் புறம் சென்றாலும்) சரணம் – 1 அவர் திருமுகம் பார்த்தால் ஆத்மானந்தம் ! அபயக் கரம் காட்ட பரமானந்தம் ! அருள் மொழி சொன்னாலோ பேரானந்தம் ! -சிறு புன்னகை பூத்தாலோ சச்சிதானந்தம்! (எந்தப் புறம் சென்றாலும்) சரணம் -2 கதியென வந்தவர்க்கு கருணாகரன் ! மதிமுகம் காட்டிவந்த திவாகரன் ! இடர்களை நீக்க வந்த க்ருபாகரன் ! – நம் மனதினை மயக்குகின்ற மனோகரன் ! (எந்தப் புறம் சென்றாலும்)