தீராமல் எரிகின்ற ‘துனி’ !

தீராமல் எரிகின்ற 'துனி' !

ஆல்பம்: சர்வம் சாயி மயம்

பாடியவர்: திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————– தீராமல் எரிகின்ற ‘துனி’  என்னும் தீயாம் ! தீராத நோய் தீய்க்க நமக்கருளும் உதியாம் ! தீனதயாளனாம் சாயி ! தீனதயாளனாம் சாயி ! தீர்க்கமாய் தெரிகின்ற ஜோதி ! (தீராமல்) தித்திக்கும் தீ! தீ!….தீ வினை எரிக்கும் தீ ! தீ ! எத்திக்கும் பரவும் ஓம் சாயி பக்தி ! எத்திக்கும் பரவும் ஓம் சாயி பக்தி ! (தீராமல்) திருமூர்த்தி பாதி ! திருமாலும் பாதி ! குருசாயி சக்தி…பாட வரும் சித்தி ! குருசாயி சக்தி…பாட வரும் சித்தி ! (தீராமல்) ஆனந்தத் தீ ! தீ ! ஆ..ராதனைத் தீ ! தீ ! ஆரத்தி பார்க்க‌…ஆகும் மனம் ஷாந்தி! (தீராமல்)