ॐ

psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

தஞ்சை பெருவுடையார் அன்னாபிஷேகம்

🕉️ சிவபெருமான்
Originals

🎵 Watch/Listen on YouTube


பசியைத் தீர்க்கும் அன்னத்தாலே
பெருவுடையார்க்கு அபிஷேகம் !
ஐப்பசி மாதம் முழுமதி நாளில்
ஐயன் சிவனுக்கு அலங்காரம் ! (2)

தரணி போற்றிடும் தஞ்சை கோயிலில்
தரிசனமாகும் தெய்வீகம் !
தரிசனம் கண்ட அடியார்க் கெல்லாம்
புண்ணியம்கோடி கணக்காகும் ! (2)

கோரஸ்:
ப்ரகதீஸ்வரா ! ஜகதீஸ்வரா ! (2)

சரணம் 1
————–
ஆயிரம் கிலோவாய் அரிசியை சேர்த்து
அன்னம் சமைத்துப் படைத்திடுவார்!
ஆயிரம் ஆயிரம் அடியவர் அந்த
அற்புதக் காட்சியைக் களித்திடுவார் (2)

கம்பீரமான நந்திதேவரும் பரவசநிலையை அடைந்திடுவார் !
நம்பிவந்தவர் நல்லவரெல்லாம் நலன்களை அள்ளிச்
சென்றிடுவார் !

கோரஸ்:
ப்ரகதீஸ்வரா ! ஜகதீஸ்வரா ! (2)

சரணம் 2
———-

அங்கம் பாதிநம் அம்மையைக் கொண்டவர்
அன்னபூரணி கோலமிது !
ஐந்து பூதமும் ஆளுவோருக்கு
ஐந்தும் கலந்த சாதமிது ! (2)

உள்ளும் புறமுமாய் வெண்மை நிறத்திலே
ஒளிரும் ஈசனைப் பாருங்கள் ! (2)
தஞ்சம் சேர்ந்தவர் காவல் ஆகிடும்
தஞ்சை ஈசனை நாடுங்கள் !

கோரஸ்:
ப்ரகதீஸ்வரா ! ஜகதீஸ்வரா ! (2)