சூரியனார்கோயில் என்னும் திருத்தலம்

சூரியனார்கோயில் என்னும் திருத்தலம் – அங்கே
ஒன்பது கோள்களும் ஒன்றாய் தரிசனம் ! (2)
சூரிய பகவானே நடு நாயகம் ! (2)
சூரிய மண்டலமே கோள்களின் தாயகம்..(2)
(சூரியனார்).
Charanam 1
—————
காஸ்யப மகரிஷியின் திருமகனாம் !
காரிருள் நீக்கிவிடும் ஒளிமுகனாம் ! (2)
ஓம் எனும் ஒலியிலே பிறந்தவனாம் ! (2) – இந்த
உலகத்தை பாலனம் செய்பவனாம் !
(சூரியனார்)
Charanam 2
——————
குருஅவர் பார்வையில் சாந்தமுடன்…
இருபுறம் துணைவியர் பாந்தமுடன் (2)
அருள்தரும் சூரியன் திருக்கோலம்..(2)
காணவே இருகண்கள் எப்படிபோதும் ?
சூரியனார்கோயில் என்னும் திருத்தலம் – அங்கே
ஒன்பது கோள்களும் ஒன்றாய் தரிசனம் !
சூரிய பகவானே நடு நாயகம் ! (2)
சூரிய மண்டலமே கோள்களின் தாயகம்..
சூரியனார்கோயில் என்னும் திருத்தலம் – அங்கே
ஒன்பது கோள்களும் ஒன்றாய் தரிசனம் !