psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ப்ரபும் ப்ராணநாதன் – சிவ ஸ்துதி – தமிழில்

🕉️ சிவபெருமான்
Translations

🎵 Watch/Listen on YouTube

1)
உயிர் ஆகி எங்கும் நிறைவான ஜீவன் !
உலகாளும் ராஜன் ! ஒளியாகும் தேவன் !
கணம் கூட்ட நாதன் ! சதானந்த யோகன் !
சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி !

2)
விரிந்தாடும் சடையில் வழிந்தோடும் கங்கை
கழுத்தோடு ஆடும் கபால மாலை !
அரவாடும் தேகன், மஹாதேவ காலன் !
சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி !
3)
பெரும் அண்டம் தானாய் விரிந்தோங்கி நின்றோன்
திருச்சாம்பல் இடுவோன், பற்றறுத்து விடுவோன் !
ஆரம்பம் இல்லா ஆனந்த தேவன் !
சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி !

4)
அதிரடியாய் சிரிப்போன், அழகாக ஜொலிப்போன் !
மரத்தடியில் இருப்போன், மகாபாவம் தீர்ப்போன் !
கிரீசன், கணேசன், சுரேசன், மகேசன்..
சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி !  

5)
கதியில்லா பேர்க்கு கதியாகும் தேவன் !
கயிலாய நாதன் ! உமைபாதி தேகன் !
நான்முகனும் பணிகின்ற ஸ்ரீ ஆத்ம ரூபன் !
சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி !    

6)
கரத்தில் தரித்தான் சூலம் கபாலம் !
வரத்தை அளிக்கும் அவன் பாத கமலம் !
விரைவாக வரவே விடை ஏறும் இறையோன் !
சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி !  

7)
குபேரன் சகாயன் ! முக்கண்ணன் ! தூயோன் !
குளிர்கால மதிபோல் முகம்கொண்ட மாயோன் !
உமா தேவி நாதன் ! சதா சத்ய சீலன் !
சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி !   

8)
மயானத்து வாசன் ! மறை சாரம் ஈசன் !
மனம் வாழும் நேசன் ! அரன், நாகபூஷண் !
மன்மதனின் தேவன் ! மகா புண்ய ரூபன் !
சிவன், சங்கரன், சம்பு திருப்பாதம் போற்றி !   

திரிசூல பாணி சிவன் துதியாம் இதனை
தினம் காலை வேளை எவர் பாடினாலும்
தனம், சுற்றம், வாழ்வுடனே சிவமுக்தி கூடும் !
சிவன், சங்கரன் அவன் திருவருளி னாலே !