Sri Varahi Anugraha Ashtakam – Tamil
அண்டமெலாம் ஆக்கிவைத்து
ஆட்டிவைக்கும் நாடகத்தை
நன்றாக இயக்குகின்ற
நாதன்அந்த ஈஸ்வரனே
நின்றாடும் உந்தன்மெய்
ரூபமதை அறியாமல்
திண்டாடும் போதினிலே
உன்புகழை பாடலெனக்
கொண்டாடிப் பாடிடவே
யாருள்ளார் அன்னையளே ?
வாராகி தாள் சரணம் !
வார்த்தாளியே சரணம் (2)
2)
அண்டமதே திருமுகமாய்
கொண்டவளின் நாமமதை
அன்றாடம் உரைப்பார்க்கு
காலபயம் கிடையாதே !
உந்தன் திருநாமமதை
உச்சரிக்கும் நொடியினிலே
சம்சாரக் கடல்தன்னை
சரளமெனக் கடப்பாரே !
நின்நாமம் அதுபோதும்
நெடும்பாடல் வேண்டிடுமோ?
வாராகி தாள் சரணம் !
வார்த்தாளியே சரணம் (2)
மாறாத நின்நினைவை
மனதோடு கொண்டதினால்
தீராத ஆனந்தம்
கொண்டேனே அம்பிகையே !
கூராக உரோமங்கள்
சிலிர்ப்புடனே நின்றிடவே
ஓயாமல் இந்தநிலை
தொடர்ந்திடவே வேண்டுகிறேன் !
தாயே!நீ தருவாயே !
தயவுடனே வரமதனை !
வார்த்தாளியே சரணம் (2)
4)
இந்திரனும் மூவருமே
உந்தன்மலர் பதங்களதை
வந்தனங்கள் செய்கையிலே
அவர்மகுட ரத்தினங்கள்
சுந்தரமாய் உந்தன்கரு
மேனியிலே மின்னிடுமே !
சிந்தையெலாம் நின்றவளே !
துன்பமெலாம் தீர்ப்பவளே!
உந்தன் திருச் சேவையினை
உளமாரச் செய்வேனே !
வார்த்தாளியே சரணம் (2)
பந்தெனவே பூமியதை
விளையாட்டாய் தாங்கியொரு
விந்தையினை செய்தவராம்
வாராக மூர்த்தியவர்
மேனியென ஆனவளே !
மங்கலத்தின் வடிவினளே !
ராணியென ஈசனவன்
மேனியிலே இடமாகி
நானிலத்தை ஆள்பவளே !
நிலவணிந்த நாயகியே !
வார்த்தாளியே சரணம் (2)
பெண்ணுருவம் கழுத்துவரை
மின்னுகின்ற தங்கம்போல் !
கண்மூன்று, பன்றிமுகம்
கரம்தாங்கும் சக்கரமே !
அன்னையளே ! வாராகி !
அன்புடனே ஒருமனதாய்
உன்னைதினம் பணிவோரின்
பதங்களதை இன்பமுடன்
விண்ணகத்து தேவரெலாம்
வாழ்த்திடுவார் ஆசியுடன் !
வார்த்தாளியே சரணம் (2)
7)
எளியோன்யென் பாவமெலாம்
கரைந்தோடிப் போனதுவே !
வலியவளே ! வாராகி !
நின்சேவை செய்வதனால்…!
மன்னவரும், தேவர்களும்,
அசுரர்களும், நாகர்களும்
என்னடியைப் பணிந்திடுவார்
உன்பக்தன் என்பதனால்
என்கின்ற போதெனக்கு
முக்தியதும் முக்கியமோ?
வார்த்தாளியே சரணம் (2)
8)
சிந்தையிலே உனைவைத்தார்
சேராத இடமுண்டோ?
வந்தனங்கள் செய்வார்க்கு
வாய்க்காத பொருளுண்டோ?
நெஞ்சோடு வைத்தார்க்கு
“ஆகாது” எனவுண்டோ?
தஞ்சமென்று வந்தார்க்கு
தோல்வியதும் இங்குண்டோ?
வார்த்தாளியே சரணம் (4)