psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ சாரதா ஸ்தோத்திரம் தமிழில்

🕉️ அம்பாள் / தேவி
Translations

🎵 Watch/Listen on YouTube


 

1)

காஷ்மீரத்தில் உறைபவளே !

சாரதா தேவியே வணங்குகிறேன்!

அனுதினம் உன்னைத் துதிக்கின்றேன் !

  1. அறிவுச் செல்வம் அருள்வாயே !

 

2)

நான்முகன் துணையே ! வாக்தேவி !

ஞான வடிவான கலைவாணி !

நாவின் நுனியிலே குடியிருந்து

நலன்களும், அமைதியும் தருபவளே !

 

3)

 

காரிருள் நாயகன் சந்திரனை

கார்குழல் தன்னில் சூடிடுவாய் !

பவானி தேவி என்றாகி

பவபயம் தீர்க்கும் நதியானாய் !

 

 4)

 

அறிவைச் செறிவூட்டும் யாவைக்கும் 

அருமறை வேதாந்தங்களுக்கும் 

திருவடிவான சரஸ்வதியே!

பத்ரகாளியே ! பணிகின்றேன்

 

5)

 

ஞான ஒளிவீசும் நிரந்தரியே 

ஞானம் யாவைக்கும் அதிபதியே

உண்மைப் பொருளான கலைவாணி 

உன்னை மறுபடி வணங்குகிறேன் 

 

6)

 

நீயிலை என்றால் இவ்வுலகு

ஜீவனில்லாத உடலாகும்

தாயே ! கலைகளின் நாயகியே

தலைவணங்கி நான் பணிகின்றேன்

 

7)

 

நீயிலை என்றால் இவ்வுலகு

உணர்விலா ஊமை ஆகிடுமே

தாயே

! வாக்கின் அதிபதியே

வாணி தேவியே வணங்குகிறேன்