psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி

🕉️ அம்மன்

🎵 Watch/Listen on YouTube


1)
இமவான் மகளே ! ஈஸ்வரியே !  சமயபுரத்தாளே போற்றி !
இமையாய் காக்கும் இனியவளே ! சமயபுரத்தாளே போற்றி !
சமயத்தில் காக்கும் சங்கரியே ! சமயபுரத்தாளே போற்றி !
சக்திதேவி உரு ஆனவளே ! சமயபுரத்தாளே போற்றி !
எமையாண் டருளும் மாரியளே !சமயபுரத்தாளே போற்றி !
ஏகாந் தத்தில் இருப்பவளே ! சமயபுரத்தாளே போற்றி !
உமையாள் வடிவே ! ஓங்காரி ! சமயபுரத்தாளே போற்றி !
ஊழ்வினை தீர்க்கும் கௌமாரி ! சமயபுரத்தாளே போற்றி !

2)
பாம்புரு வாகி வருபவளே ! சமயபுரத்தாளே போற்றி !
பட்டினி விரதம் இருப்பவளே! சமயபுரத்தாளே போற்றி !
வேம்பில் வாழும் தேவதையே ! சமயபுரத்தாளே போற்றி !
வேத வல்லியாத் திகழ்பவளே ! சமயபுரத்தாளே போற்றி !
சாம்பிராணி வாசகி ! சௌந்தரியே !சமயபுரத்தாளே போற்றி !
சத்திய திருவுரு ஆனவளே! சமயபுரத்தாளே போற்றி !
சாம்பவி, பைரவி வடிவினளே !சமயபுரத்தாளே போற்றி !
சாட்சி என்றாகி வருபவளே !சமயபுரத்தாளே போற்றி !

3)
குங்குமம், நீறும் தரித்தவளே! சமயபுரத்தாளே போற்றி !
குடையாய் நாகம் கொண்டவளே ! சமயபுரத்தாளே போற்றி !
அங்கத்தில் யந்திரம் பொதிந்தவளே ! சமயபுரத்தாளே போற்றி !
அனுக்ரஹ மாரியே ! அம்பிகையே !சமயபுரத்தாளே போற்றி !
ரங்கனின் சோதரி ஆனவளே !சமயபுரத்தாளே போற்றி !
ரதமாய் அசையும் பொன்மகளே !சமயபுரத்தாளே போற்றி !
மங்கல நாயகி மகமாயி !சமயபுரத்தாளே போற்றி !
மாரி அம்மனில் மகராணி !சமயபுரத்தாளே போற்றி !

4)
எண்கரம் ஆயுதம் தரித்தவளே ! சமயபுரத்தாளே போற்றி !
எலுமிச்சை ப்ரியையே ! எம்தாயே ! சமயபுரத்தாளே போற்றி !
கண்கள் ஆயிரம் கொண்டவளே ! சமயபுரத்தாளே போற்றி !
கருணையின் வடிவாய் ஆனவளே ! சமயபுரத்தாளே போற்றி !
கண்ணபுரத்து நாயகியே ! சமயபுரத்தாளே போற்றி !
கண்கண்ட தெய்வம் ஆனவளே ! சமயபுரத்தாளே போற்றி !
முண்டகக்கண்ணி அம்மையளே ! சமயபுரத்தாளே போற்றி !
மங்கையர் திலகம் ஆனவளே ! சமயபுரத்தாளே போற்றி !


5)
சித்திரை திருவிழா நாயகியே ! சமயபுரத்தாளே போற்றி !
சித்திகள் யாவும் தருபவளே ! சமயபுரத்தாளே போற்றி !
பத்தரை மாற்று பொன்மனமே ! சமயபுரத்தாளே போற்றி !
பரிவுடன் அருளும் நற்குணமே ! சமயபுரத்தாளே போற்றி !
இத்தரை உயிர்களைக் காப்பவளே ! சமயபுரத்தாளே போற்றி !
ஈசன் சிவனார் அன்பினளே ! சமயபுரத்தாளே போற்றி !
பக்தர்கள் காவல் ஆனவளே ! சமயபுரத்தாளே போற்றி !
புற்றாய் ஆகி நின்றவளே !சமயபுரத்தாளே போற்றி !

6)
கொள்ளிடக் கரையில் கொலுவிருப்பாய்! சமயபுரத்தாளே போற்றி !
கொடும்வினை யாவும் தீர்த்திடுவாய் ! சமயபுரத்தாளே போற்றி !
கொள்ளை அழகோடு ஜொலித்திருப்பாய் ! சமயபுரத்தாளே போற்றி !
கொஞ்சும் கோலப் பசுங்கிளியாள் !சமயபுரத்தாளே போற்றி !
பிள்ளைச் செல்வம் வரமளிப்பாய் !சமயபுரத்தாளே போற்றி !
பிறவிப் பிணி தீர்த்து கரைசேர்ப்பாய் !சமயபுரத்தாளே போற்றி !
உள்ளக் கோயிலில் குடியிருப்பாய் !சமயபுரத்தாளே போற்றி !
உருகித் தொழுவாரை அரவணைப்பாய் !சமயபுரத்தாளே போற்றி !

7)
விஜய நகரரசின் தேவதையே ! சமயபுரத்தாளே போற்றி !
வில்லும், வாளும் தரித்தவளே ! சமயபுரத்தாளே போற்றி !
கஜமுகன், அறுமுகன் அன்னையளே ! சமயபுரத்தாளே போற்றி !
கருப்பண்ண சாமிஉன் பரிவாரமே !சமயபுரத்தாளே போற்றி !
புஜங்கள் எட்டாய் கொண்டவளே !சமயபுரத்தாளே போற்றி !
புண்ணியம் சேர்க்கும் தரிசனமே! சமயபுரத்தாளே போற்றி !
நிஜமாய், நிழலாய்த் தொடர்பவளே ! சமயபுரத்தாளே போற்றி !
நிகழ்பவை யாவும் உன்னருளே ! சமயபுரத்தாளே போற்றி !

8)
தைப்பூ சத்தில் அருள்பவளே ! சமயபுரத்தாளே போற்றி !
தாலி பாக்கியம் தருபவளே ! சமயபுரத்தாளே போற்றி !
வைஷ்ணவி எனும்பேர் கொண்டவளே ! சமயபுரத்தாளே போற்றி !
வையகம் காக்கும் வல்லவளே ! சமயபுரத்தாளே போற்றி !
வைத்திய ராய்பிணி தீர்ப்பவளே ! சமயபுரத்தாளே போற்றி !
ஜம்பு லிங்கர்சீர் ஏற்பவளே ! சமயபுரத்தாளே போற்றி !
தையலர் நாயகி ஆனவளே ! சமயபுரத்தாளே போற்றி !
தயவுகள் செய்து காப்பவளே ! சமயபுரத்தாளே போற்றி !

9)
மகா மாரியாய் வந்தவளே ! சமயபுரத்தாளே போற்றி !
மாயா சுரனை வென்றவளே ! சமயபுரத்தாளே போற்றி !
சுகா சினியாய் அருள்பவளே ! சமயபுரத்தாளே போற்றி !
சூட்சும ரூபத்தில் வருபவளே !சமயபுரத்தாளே போற்றி !
சிகா மணியே ! சத்தியமே !சமயபுரத்தாளே போற்றி !
சிம்ம வாகினியே! நித்தியமே ! சமயபுரத்தாளே போற்றி !
சதா சிவனாரின் துணையவளே !சமயபுரத்தாளே போற்றி !
சர்வ சக்திகள் கொண்டவளே !சமயபுரத்தாளே போற்றி !

10)

கருவை அரும்பிடச் செய்பவளே ! சமயபுரத்தாளே போற்றி !
கண்ண ணூரிலே அமர்ந்தவளே ! சமயபுரத்தாளே போற்றி !
கரும்புத் தூளியை ஏற்பவளே ! சமயபுரத்தாளே போற்றி !
காவிரிக் கரையிலில் இருப்பவளே !சமயபுரத்தாளே போற்றி !
திருவரங் கன்சீர் கொள்பவளே !சமயபுரத்தாளே போற்றி !
தீவினை யாவும் அறுப்பவளே !சமயபுரத்தாளே போற்றி !
பெருவளை வாய்க்கால் திருநீரே !சமயபுரத்தாளே போற்றி !
பெற்றது எல்லாம் உன்னருளே !சமயபுரத்தாளே போற்றி !

11)
தலமரம் வேம்பாய் கொண்டவளே !சமயபுரத்தாளே போற்றி !
தத்துவம் கடந்த நாயகியே !சமயபுரத்தாளே போற்றி !
மலர்கள் மழையில் மகிழ்பவளே !சமயபுரத்தாளே போற்றி !
மந்திர வடிவாய் ஆனவளே !சமயபுரத்தாளே போற்றி !
வளமிகு சோழ நாட்டினளே !சமயபுரத்தாளே போற்றி !
வளங்கள் சேர்ப்பாய் வாழ்வினிலே !சமயபுரத்தாளே போற்றி !
குலத்தினைக் காக்கும் தேவியளே!சமயபுரத்தாளே போற்றி !
குறைகள் யாவும் தீர்ப்பவளே !சமயபுரத்தாளே போற்றி !

12)
சிவந்தி லிங்கர்க் கருள்செய்தவளே !சமயபுரத்தாளே போற்றி !
சீதளா தேவியாய் அருள்பவளே !சமயபுரத்தாளே போற்றி !
சிவவடி வாகிய ரூபிணியே !சமயபுரத்தாளே போற்றி !
சிலைவடி வாகிய மூலிகையே !சமயபுரத்தாளே போற்றி !
நவசண்டி யாகம் ஏற்பவளே !சமயபுரத்தாளே போற்றி !
நாகா பரணம் பூண்டவளே !சமயபுரத்தாளே போற்றி !
கவலைகள் யாவும் தீர்ப்பவளே !சமயபுரத்தாளே போற்றி !
கம்சன் அசரீரி ஒலிகுரலே !சமயபுரத்தாளே போற்றி !

13)

ஆடி வெள்ளியின் நாயகியே !சமயபுரத்தாளே போற்றி !
அபயம் அளிக்கும் அம்பிகையே !சமயபுரத்தாளே போற்றி !
நாடி வருவோரைக் காப்பவளே !சமயபுரத்தாளே போற்றி !
நல்லவை யாவும் தருபவளே !சமயபுரத்தாளே போற்றி !
ஆதி சக்தியாய் ஆனவளே !சமயபுரத்தாளே போற்றி !
அம்மை நோய்தீர்க்கும் அம்மையளே !சமயபுரத்தாளே போற்றி !
நாதி இலார்க்கும் அன்னையளே !சமயபுரத்தாளே போற்றி !
நாத ஆதாரம் ஆனவளே !சமயபுரத்தாளே போற்றி !

14)

வேப்பிலைக் காரி மாரியளே ! சமயபுரத்தாளே போற்றி !
வேப்பங் காற்றில் மகிழ்பவளே ! சமயபுரத்தாளே போற்றி !
ஏற்றம் தருவாய் வாழ்வினிலே ! சமயபுரத்தாளே போற்றி !
எல்லாம் அருளும் அன்னையளே ! சமயபுரத்தாளே போற்றி !