psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

மனசெல்லாம் வாராகி

🕉️ ஸ்ரீ வாராகி
Originals

🎵 Watch/Listen on YouTube


உந்துதலைத் தந்திடவே உருவானவள் !
பன்றி தலை பெண் உடலும் வடிவானவள்  !  (2)
சந்திரனும் சூரியனும் விழியானவள் ! (2)
சரண் என்று வந்தவர்க்கு கதியானவள் ! (2)

கோரஸ்:மனசெல்லாம் வாராகி வாராகியே !
மகிழ்ச்சியினைத் தருபவள் வாராகியே ! (2)

படை எடுத்து புவி நடுங்க வருகின்றவள் !
பகை முடித்து வெற்றி யினைத் தருகின்றவள் !(2)
மடை திறந்த வெள்ளம்போல்அருள்கின்றவள்! (2)
மனமுருகி அழைத்தாலே வருகின்றவள் ! (2)

கோரஸ்:மனசெல்லாம் வாராகி வாராகியே !
மகிழ்ச்சியினைத் தருபவள் வாராகியே ! (2)
(உந்துதலைத்)

அண்டமிதன் ஆதியாய் திகழ்கின்றவள்!
மண்டலங்கள் யாவையும் ஆள்கின்றவள் !
குண்டலினி சக்தியதன் விசையானவள் ! (2)
அண்டியவர் துயர் நீக்கும் இசையானவள்! (2)
கோரஸ்:மனசெல்லாம் வாராகி வாராகியே !
மகிழ்ச்சியினைத் தருபவள் வாராகியே ! (2)
(உந்துதலைத்)