psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

கால பைரவர் பஞ்சரத்னம்

🕉️


Youtube link

1)
கட்கம், கபாலம்
டமருகம், சூலம்
எப்போதும் ஏந்தும்
மலர்கரங்கள் கொண்டோன்
முக்கண்ணன், திகம்பரன்
திருநீறு தரித்தோன் !
பிறை சூடும் பைரவனே
பொற்பாதம் போற்றி !

2

பக்தர்களின் மனதில்
‘சம்பு’வென நின்றோன் !
கேட்கும் வரமருள்வோன்!
கவித்துவமாய் ஆனோன் !
ஞமலிக்கும் தன்னால்
பெருமையினைத் தந்தோன் !
பிறை சூடும் பைரவனே
பொற்பாதம் போற்றி !
3)

முதுமையின் இன்னல்
தனைதீர்த்துக் காப்போன் !
முனிவர்கள் பணியும்
கமலமலர் அடியோன் !
மானிடர், தேவர்..
வணங்கிடும் நாதன் !
பிறை சூடும் பைரவனே
பொற்பாதம் போற்றி !
4)
ஒருமனதாய் ஆகும்
தவச்செல்வம் கொண்டோன் !
குருதேவர், முனிவர்
தொழும்புண்ய பாதன் !
ஒருமனது நிலைக்கு
உடனாகச் செல்வோன் !
பிறை சூடும் பைரவனே
பொற்பாதம் போற்றி !
5)
அசைகின்ற உயிர்க்கும்
அசையாத பொருட்கும்
விசையான நாதன் !
கிராமத்து தேவன் !
கருவின்றி வந்தோன்
மனதாலே பெரியோன்
பிறை சூடும் பைரவனே
பொற்பாதம் போற்றி !