psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ விஷ்ணு தசாவதாரம்

🕉️ விஷ்ணு / திருமால்
Originals

🎵 Watch/Listen on YouTube


ஸ்ரீ ஸ்ரீநிவாசனே ! ஸ்ரீ லக்ஷ்மி நேசனே !
ஸ்ரீ விஷ்ணு திருமாலனே !
எங்கள் ஸ்ரீ விஷ்ணு திருமாலனே !
ஸ்ரீ விஷ்ணு திருமாலனே !

தர்ம வழி காக்கவே.கர்ம பலன் காட்டவே..
அவதாரம் பல செய்தவா ! (2)

சரணம் – 1
——————–

ஆழ்கடல் அடியிலே வைத்தநான் மறைகளை
மீட்கவே வந்தது – நீயொரு மச்சனாய் (2)
பாற்கடலை கடைகின்ற போதிலே…
மந்திர மலைதாங்கும் கூர்மமாய்…
பூமியினைப் பந்தெனவே தாங்கவே
விரைந்தெழுந்து வந்தாய்வ ராகனாய்!
தூண்பிளந்த சிம்மனே !
வானளந்த வாமனே !
கோவிந்த கோவிந்த கோவிந்த கோபாலனே !

ஸ்ரீ ஸ்ரீநிவாசனே ! ஸ்ரீ லக்ஷ்மி நேசனே !
ஸ்ரீ விஷ்ணு திருமாலனே !
எங்கள் ஸ்ரீ விஷ்ணு திருமாலனே !
ஸ்ரீ விஷ்ணு திருமாலனே !

சரணம் – 2
——————-

கோடரியை ஏந்தியே ஸ்ரீபரசு ராமனாய்
வந்ததும் மண்ணிலே – தந்தைசொல் காக்கவே ! (2)
சீலமுடன் வாழ ஒரு தாரமே …
அதைச் சொல்லும் ராமாவதாரமே !
மாயவனாம் கண்ணன் அவன் அண்ணனாய்
முன்பெடுத்த ரூபம் பலராமனாய் !
கீதையின் கண்ணனே !
கலிமுடிக்கும் கல்கியே !

கோவிந்த கோவிந்த கோவிந்த கோபாலனே !

ஸ்ரீ ஸ்ரீநிவாசனே ! ஸ்ரீ லக்ஷ்மி நேசனே !
ஸ்ரீ விஷ்ணு திருமாலனே !
எங்கள் ஸ்ரீ விஷ்ணு திருமாலனே !
ஸ்ரீ விஷ்ணு திருமாலனே !