psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

பண்டுரீதி கொலு – தமிழில்

🕉️


Youtube Link

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கீர்த்தனை (தெலுங்கு)

தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத்
ராகம்: ஹம்ஸநாதம்

தாளம்: ஆதி

பல்லவி
————–
உன்னைக் காவல் செய்யும் பாக்யம் கிட்டுமா?
ராமா…

அனுபல்லவி
——————-
காமம், க்ரோதம் என்னும்…என்னுள் உள்ள பகைகள்
ஆறும் அழித்து என்னைத் தூயன் ஆக்கி வைத்தால்…!

(உந்தன் காவலன்)

சரணம்
——————
மாறா அன்பைக் கொண்டேன் எந்தன் கவசமாக…
ராம பக்தன் என்னும் பேரே பதக்கமாக…
ராம நாமம் எந்தன் வாளாய் ஆக நானும்
த்யாக ராஜன் ஜொலிப்பேன் உந்தன் பக்கம் நின்றே…