psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஆதி சங்கரா ! – ஞான ஜோதி சங்கரா !

🕉️ ஸ்ரீ ஆதிசங்கரர்
Originals

🎵 Watch/Listen on YouTube


ஓரெட்டு வயதினிலே
 உவந்தேற்றாய் சன்யாசம் !
ஈரெட்டு வயதுக்குள்
  எழுதியதோ ஏராளம் !
மூவெட்டு வயதுக்குள்
  தேசமெலாம் சஞ்சாரம் !

நாலெட்டு வயதினிலே
  சேர்ந்தாயே கைலாயம் ! (2)

Chorus:
ஆதி சங்கரா ! – ஞான ஜோதி சங்கரா !

ஆதி சங்கரா ! – ஞான ஜோதி சங்கரா ! (2)
 
உள்ளார்ந்த அன்போடு
  உலர்ந்ததொரு கனிதந்த
நல்லாளாம் மூதாட்டி
  அவளன்பை பாராட்டி…
கனகமழை பொழிந்திடவே
செய்தாயே அற்புதமே !

கனகதாரா ஸ்தோத்திரமாய்
  எமக்களித்தாய் பொக்கிஷமே ! (2)

Chorus:
ஆதி சங்கரா ! – ஞான ஜோதி சங்கரா !
ஆதி சங்கரா ! – ஞான ஜோதி சங்கரா ! (2)
 

பித்தேறி பலவிதமாய்
  பிரிந்திருந்த மனிதர்க்கு
அத்வைத பொருள்சொல்லி
  அருள்வழியைச் செய்தாயே !
முத்தான உன்மொழிகள்
  முப்பிறவி எடுத்தாலும்

வித்தாகும் அறிவுக்கு
  விருப்புடனே கேட்டாலே ! (2)
Chorus:
ஆதி சங்கரா ! – ஞான ஜோதி சங்கரா !
ஆதி சங்கரா ! – ஞான ஜோதி சங்கரா ! (2)
 
 
வேதாந்தம், உபநிஷதம்
  விரிவான வியாக்யானம் !
மாதாவாம் அம்பிகைமேல்
  மாணிக்க ஸ்தோத்திரங்கள் !
சாதாரண மனிதரைப்போல்
  சகமிதனில் அவதரித்த
ஆதார சிவவடிவே…
  சாஷ்டாங்க நமஸ்காரம் !  (2)
Chorus:
ஆதி சங்கரா ! – ஞான ஜோதி சங்கரா !
ஆதி சங்கரா ! – ஞான ஜோதி சங்கரா ! (2)