ஸ்ரீ வக்ரதுண்ட கவசம் தமிழில்
1.
மகேசன் மைந்தன் என் சிரத்தினைக் காக்கட்டும் !
மிருதுவாக நெற்றியை விநாயகன் காக்கட்டும் !
மூவிழியோன் எந்தனிரு விழிகளையும் காக்கட்டும் !
முறம்போல காதுடையோன் என்செவிகள் காக்கட்டும் !
2.
நாசியினை ஹேரம்பன் நலமுடனே காக்கட்டும் !
நாவினை கணேசன் நல்லபடி காக்கட்டும் !
முகத்தினை ஆனைமுகன் பொலிவுடனே காக்கட்டும் !
கழுத்தினை நீலகண்டன் அன்பினனே காக்கட்டும் !
3.
பெரும்பலவான் தோள்களையே பலமுடனே காக்கட்டும் !
கரமிரண்டும் எப்போதும் விக்னராஜன் காக்கட்டும் !
கோடரியை ஏந்தியவன் புஜங்களினை காக்கட்டும் !
கந்தகுரு சோதரனே என்னிதயம் காக்கட்டும் !
4.
தொந்தியாய் வயிறுடையோன் நடுவுடலைக் காக்கட்டும் !
சிந்தூரம் தரித்திடுவோன் உந்திசுழி காக்கட்டும் !
பாசம் ஏந்தியவன் குதத்தினைக் காக்கட்டும் !
பார்வதி திருமகனே குறிகளைக் காக்கட்டும் !
5.
எலியின்மேல் வருபவனே தொடைகளினைக் காக்கட்டும் !
அகிலத்தின் நாயகனே முழங்கால்கள் காக்கட்டும் !
கமலமலர் அமர்ந்தவன் என் கால்களினைக் காக்கட்டும் !
அசுரர்குலம் அழித்தவன் என் பாதங்கள் காக்கட்டும் !
6.
ஒற்றை தந்தன் என் முன்புறத்தைக் காக்கட்டும் !
கணங்களின் நாயகனே பின்புறத்தைக் காக்கட்டும் !
மோதகம் விரும்பிடுவோன் மறுபுறங்கள் காக்கட்டும் !
சித்தியை அருளிடுவோன் மற்றவைகள் காக்கட்டும் !
7.
எந்தன் வழியெல்லாம் துணையாகி வருபவனாம்
சதுர்த்தியின் நாயகனே எனதெல்லாம் காக்கட்டும் ! (2)
8.
செந்நிற மலர்களுடன் அருகம்புல் கரமெடுத்து
சுந்தர கணபதியை சதுர்த்தியிலே பூஜித்து
புண்ணிய துதியிதனை பக்தியுடன் சொன்னாலே
ராஜகுலம் தழைத்திடுமே விக்னராஜன் அருளாலே…

*****
9.
மந்திரம் இதனை யந்திரத்தில் எழுதிவைத்து
கரத்தினிலே தரித்திடுவோர் விரும்பியதைப் பெற்றிடுவார்
ஐயமிலை..நிச்சயமாய்…
விரும்பியதைப் பெற்றிடுவார்
ஐயமிலை..நிச்சயமாய்…
காப்பாகும் கவசத்தை கருத்துடனே ஒருலட்சம் முறைசொல்லி
எட்டு திரவியங்கள் நெய்யோடு படைத்தாலே..
கிட்டுமே யாவையுமே வக்ர துண்டன் அருளாலே…
ப்ருகு முனிவர் படைத்ததுவாம் துதியிதனை
புவியினிலே படிப்பார்க்கு கணபதியின் திருவருளால்
செல்வமெலாம் சேர்ந்துவிடும் !