சத்யம் சிவம் பெரியவா

Youtube–ல் பார்க்க…
———
பிறைசூடன் பரமேசன்
புவிமீது வந்தான் !
குறைதீர்த்து அருள்செய்யும்
காருண்ய னாக !
சந்திர சேகரன்
எனும்பேரைக் கொண்டான் !
மந்திரமாய் ‘ஹர ஹர சங்கர’
சொன்னான் !
சத்யம் சிவம் பெரியவா !
சத்யம் சிவம் பெரியவா !
திருநீறு நிறைகின்ற
திருமேனி கொண்டான் !
திருத்தண்டம் கரமேந்தும்
சூலமாய்க் கொண்டான் !
காவிஉடை சூடிஅவன்
காஞ்சிநகர் வந்தான் !
பாவியர்க்கும் பதமலரில்
நற்கதியே தந்தான் !
சத்யம் சிவம் பெரியவா !
சத்யம் சிவம் பெரியவா !
இமயம்முதல் குமரிவரை
காலடியாய் சென்றான் !
சமய, மத தத்துவங்கள்
சகலருக்கும் சொன்னான் !
நான்மறையின் பெருமையினை
நாற்புறமும் சொன்னான் !
நாடிவந்த பக்தர்க்கெலாம்
நன்னிலையைத் தந்தான் !
சத்யம் சிவம் பெரியவா !
சத்யம் சிவம் பெரியவா !
தாயென்று வந்தார்க்கு
பேரன்பு தந்தான் !
நோயென்று வந்தால்
நிவாரணம் தந்தான் !
அருள்வேண்டி வந்தார்க்கு
வரமள்ளித் தந்தான் !
பொருள்வேண்டி வந்தார்க்கு
போதியன தந்தான் !
சத்யம் சிவம் பெரியவா !
சத்யம் சிவம் பெரியவா !
துறவறத்து வாழ்வியலின்
இலக்கணமாய் இருந்தான்!
அறவழியின் ஒளிகாட்டி
இருள்நீக்கி நின்றான் !
வான்வெளியின் சூரியனை
விழியொளியாய்க் கொண்டான் !
தானுமொரு மானிடனாய்
நம்முடனே வாழ்ந்தான் !
சத்யம் சிவம் பெரியவா !
சத்யம் சிவம் பெரியவா !