மலை கார்த்திகை தீபம்
பௌர்ணமி திருநாள் கார்த்திகை மாதம்
நெய்யினை இட்டு ஏற்றுக தீபம்
அதிலே எரியும் பாவங்கள் யாவும்
அண்ணாமலையான் அருளும் சேரும்
***
மலை கார்த்திகை தீபம் மகா தீபமே !
மலையதுவே அகலாக மாறிப் போகுமே !
ஆதி சிவன் தேகம்…அக்கினியின் ரூபம் !
ஆதி சிவன் தேகம்…அக்கினியின் ரூபம் !
அண்ணாமலை மேலே…ஜோதியான தீபம் !
(மலை கார்த்திகை தீபம்)
இடைவிடாது தவமிருந்து பார்வதி தேவி
ஈசன் இட பாகமானாள் இந்த நாளிலே !
படைப்பவனும், காப்பவனும் ஜோதிப்பிழம்பென – ஈசன்
திருவுருவைக் கண்டதுவும் இந்த நாளிலே !
(மலை கார்த்திகை தீபம் )
விளக்கேற்ற கணம்புல்ல நாயனாருமே
தலைமுடியை திரி யாக்கிய திந்த நாளிலே !
அன்புடனே உமாதேவி ஆறு முகத்தையும்…
அரவணைத்து சேர்த்ததுவும் இந்த நாளிலே !
(மலை கார்த்திகை தீபம் ) !