ஸ்ரீ மகாலட்சுமி ஸ்துதி தமிழில்
1)
பர ப்ரம்மத்தின் வடிவாய்த் திகழும் ஆதிலட்சுமியே வணங்கினேன் !
செல்வம், புகழும், சௌபாக்யமும், விரும்பிடும் யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
ஆதிலட்சுமியே எனக்கருள்வாய் !
ஆதிலட்சுமியே எனக்கருள்வாய் !
2)
சந்ததி வளர்க்கும் சந்தானம் அருளும், சந்தான லட்சுமியே வணங்கினேன் !
பிள்ளைச் செல்வம், பொருட்செல்வம், விரும்பிடும் யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
சந்தான லட்சுமியே எனக்கருள்வாய் !
சந்தான லட்சுமியே எனக்கருள்வாய் !
3)
தெய்வீக ஞானத்தின் வடிவாய்த் திகழும், வித்யாலட்சுமியே வணங்கினேன்
கலைகளில் திறனும், நல்ல ஞானமும், விரும்பிடும் யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
வித்யாலட்சுமியே எனக்கருள்வாய் !
வித்யாலட்சுமியே எனக்கருள்வாய் !
4)
வறுமையை, ஏழ்மையை அழிக்கும் தேவியே தனலட்சுமியே வணங்கினேன் !
குறைவிலா செல்வமும், வளங்களுடன், விரும்பிடும் யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
தனலட்சுமியே எனக்கருள்வாய் !
தனலட்சுமியே எனக்கருள்வாய் !
5)
அணிகலன் பலவாய் சூடி ஒளிர்ந்திடும் தான்யலட்சுமியே வணங்கினேன் !
நிறைவாய் உணவும், தான்யங்களும், விரும்பிடும் யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
தான்யலட்சுமியே எனக்கருள்வாய் !
தான்யலட்சுமியே எனக்கருள்வாய் !
6)
கலியுகம் கொடுக்கும்இன்னல் நீக்கும் மேதாலட்சுமியே வணங்கினேன் !
கூரிய மதியும், அறிவாற்றலும், விரும்பிடும் யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
மேதாலட்சுமியே எனக்கருள்வாய் !
மேதாலட்சுமியே எனக்கருள்வாய் !
7)
தெய்வீகத்தின் உருவாய் திகழும் கஜலட்சுமியே வணங்கினேன் !
பரிக்கூட்டம், ஆவினத்தோடு, விரும்பிடும் யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
கஜலட்சுமியே எனக்கருள்வாய் !
கஜலட்சுமியே எனக்கருள்வாய் !
8)
பரா சக்தியின் வடிவாய் விளங்கும் வீரலட்சுமியே வணங்கினேன் !
வீரம், அகத்தின் ஆற்றலதோடு, விரும்பிடும் யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
வீரலட்சுமியே எனக்கருள்வாய் !
வீரலட்சுமியே எனக்கருள்வாய் !
9)
எல்லாசெயலிலும் வெற்றிகள் அளிக்கும், ஜெயலட்சுமியே வணங்கினேன் !
மங்கலம், வெற்றிகள் தந்திடுவாய்! விரும்பிடும் யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
ஜெயலட்சுமியே எனக்கருள்வாய் !
ஜெயலட்சுமியே எனக்கருள்வாய் !
10)
சௌபாக்யங்கள் வழங்கும் தேவி, பாக்யலட்சுமியே வணங்கினேன் !
மாறா சௌபாக்யம் தந்திடுவாய் ! விரும்பிடும் யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
பாக்யலட்சுமியே எனக்கருள்வாய் !
பாக்யலட்சுமியே எனக்கருள்வாய் !
11)
திருமால் திருமார் புறைகின்ற, கீர்த்திலட்சுமியே வணங்கினேன் !
நற்பெயர், புகழும் தந்திடுவாய் ! விரும்பிடும் யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
கீர்த்திலட்சுமியே எனக்கருள்வாய் !
கீர்த்திலட்சுமியே எனக்கருள்வாய் !
12)
நோய்கள் யாவையும் தீர்த்து அருளிடும், ஆரோக்யலட்சுமியே வணங்கினேன்!
நீண்ட ஆயுள் ஆரோக்யத்துடன் விரும்பிடும் யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
ஆரோக்யலட்சுமியே எனக்கருள்வாய் !
ஆரோக்யலட்சுமியே எனக்கருள்வாய் !
13)
சித்திகள் யாவும் அருளிடச் செய்யும், சித்தலட்சுமியே வணங்கினேன் !
வென்று முடிக்கின்ற திறனுடனே விரும்பிடும் யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
சித்தலட்சுமியே எனக்கருள்வாய் !
சித்தலட்சுமியே எனக்கருள்வாய் !
14)
அழகினைக் கூட்டும் அலங்காரி சௌந்தர்யலட்சுமியே வணங்கினேன்!
அழகிய உருவம், செல்வமுடன் விரும்பிடும் யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
சௌந்தர்யலட்சுமியே எனக்கருள்வாய் !
சௌந்தர்யலட்சுமியே எனக்கருள்வாய் !
15)
இகபர சுகங்கள் அருளும் தேவியே சாம்ராஜ்யலட்சுமியே வணங்கினேன் !
செல்வமும், முக்தியும் தந்திடுவாய் ! விரும்பிடும் யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
சாம்ராஜ்யலட்சுமியே எனக்கருள்வாய் !
சாம்ராஜ்யலட்சுமியே எனக்கருள்வாய் !
16)
மங்கல வடிவாய் திகழ்கின்ற மங்கலலட்சுமியே வணங்கினேன் !
மங்கலம், நலன்கள், இவற்றோடு, நல்லன யாவையும் எனக்கருள்வாய் !
Chorus:
மங்கலலட்சுமியே எனக்கருள்வாய் !
மங்கலலட்சுமியே எனக்கருள்வாய் !
17)
மங்கலம் யாவிலும் மங்கலமே ! மங்கல செயல்களின் காரணியே !
சரணடைந்தார்க்கு ஆதரவே ! முக்கண் நாராயணி போற்றி !
Chorus:
முக்கண் நாராயணி போற்றி !
முக்கண் நாராயணி போற்றி !
18)
பகையும், தடைகளும் அழிப்பவளே ! தீபலட்சுமியே வணங்கினேன் !
நோயிலா நீண்ட ஆயுளுடன் மங்கலம் தங்கிடச் செய்வாயே
Chorus:
மங்கலம் தங்கிடச் செய்வாயே !
மங்கலம் தங்கிடச் செய்வாயே !
தீபலட்சுமியே அருள்வாயே
தீபலட்சுமியே அருள்வாயே