ॐ

psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ மூகாம்பிகை அஷ்டகம் தமிழில்

🕉️ அம்பாள் / தேவி
Translations

🎵 Watch/Listen on YouTube


1)
பரமனும், இந்த்ராதி
  தேவர்களும் தொழுபவளே !
பரப்ரம்ம வடிவே !
  ஜகம்காக்கும் தாயே !
சரணென்று வந்தார்க்கு
  அவர்விரும்பிக் கேட்கின்ற

வரம்யாவும் தருபவளே !
  என் வந்தனங்கள் ! (2)

chorus:

கொல்லூரில் கொலுவிருக்கும்
 ஸ்ரீ மகாலட்சுமியே
என் வந்தனங்கள் !
என் வந்தனங்கள் !

2)
படைக்கின்றார் ப்ரம்மனுமே,
  காக்கின்றார் மாலவனே
கடைசியிலே முடிக்கின்றார்
  ஈசனெனெ அறிவோமே !
தடையின்றி மூவருமே
  தொழில்செய்ய காரணமுன்

கடைப்பார்வை சொரிகின்ற
  கருணை தானன்றோ? (2)

chorus:
கொல்லூரில் கொலுவிருக்கும்
 ஸ்ரீ மகாலட்சுமியே
என் வந்தனங்கள் !
என் வந்தனங்கள் !

3)
அண்டத்தை உருவாக்கி
  அதைக்காத்து, முடிவினிலே
தன்னோடு உள்வாங்கிக்
  கொள்கின்ற தாயே !
அண்டத்து உயிர்யாவும்
  உயர்ஞானம் ஆனவளே !

தன் மாயை அதனாலே
  அகிலத்தை நிறைத்தவளே ! (2)

chorus:
கொல்லூரில் கொலுவிருக்கும்
 ஸ்ரீ மகாலட்சுமியே
என் வந்தனங்கள் !
என் வந்தனங்கள் !

4)

கருணைமழை பொழியும்உன்
 கடைப்பார்வை அதனாலே..
அருமைப்பொருள் பெறுவாரே
  பெரும்பக்தர் எல்லாம் !
அருள்புரிந்த தாயுன்னை
  “ஸ்ரீலட்சுமி” என்றன்பாய்

ஒருசேரக் கூப்பிட்டு
  கொண்டாடி களிப்பாரே ! (2)

chorus:
கொல்லூரில் கொலுவிருக்கும்
 ஸ்ரீ மகாலட்சுமியே
என் வந்தனங்கள் !
என் வந்தனங்கள் !

5)

உள்ளத்து உணர்வுகளை
  உருதந்து சொல்லாக
சொல்லிடவும் இயலாத
  ஊமையரும் தாயுன்னை
உள்ளார்ந்து வேண்டிடவே
  அருள்கின்ற அன்னையளே !

கொல்லூரில் அதனாலே
  மூகாம்பிகை ஆனாய் ! (2)

chorus:
கொல்லூரில் கொலுவிருக்கும்
 ஸ்ரீ மகாலட்சுமியே
என் வந்தனங்கள் !
என் வந்தனங்கள் !

6)

அத்வைத மெய்ப்பொருளின்
 திருவடிவாய் தானாகி
அண்டத்தில் விளையாட்டாய்
  லீலைபல செய்பவளே !
கொண்டாடி பக்தரெல்லாம்
  அதனாலே தாயுன்னை

பண்பாடி  “குமாரி” ,

“ஸ்ரீகௌரி” என்பாரே ! (2)

 

chorus:
கொல்லூரில் கொலுவிருக்கும்
 ஸ்ரீ மகாலட்சுமியே
என் வந்தனங்கள் !
என் வந்தனங்கள் !

7)

ஸ்ரீசக்ரம் எனும்லிங்க 
   வடிவினிலே ஒளிர்பவளே !
ஸ்ரீ விஷ்ணு சிவனாதி
   தெய்வங்களின் மேனியிலே 
உருவான ஒளிசேர்ந்து
    உரு ஆன தேவியளே !
 
பெரும்யோகி கோலரிஷி 
    உளமலரில் உறைபவளே (2)
 
chorus:
கொல்லூரில் கொலுவிருக்கும்
 ஸ்ரீ மகாலட்சுமியே
என் வந்தனங்கள் !
என் வந்தனங்கள் !
 
8)
 
சங்குடனே சக்கரமும்
   தரித்தவளே போற்றி!
தங்கமய மாகஒளிர்
    அம்பிகையே போற்றி
பயம் நீக்கி வரமருளும்
  “ஸ்ரீ கௌரி” போற்றி !
கமல மலர் உறைபவளே !
  கண்மூன்று கொண்டவளே !
சரண் என்று வந்தார்க்கு
  துணையாவாய் போற்றி ! (2)
 
chorus:
கொல்லூரில் கொலுவிருக்கும்
 ஸ்ரீ மகாலட்சுமியே
என் வந்தனங்கள் !
என் வந்தனங்கள் ! 
 
9)

துதிகளிலே ரத்தினமாம்,
   தெய்வங்கள் தந்த
லட்சுமி அஷ்டகம்
  அனுதினமும் இதனை
அம்பிகையே உனைநெஞ்சில்
  உருவேற்றி படிப்பார்க்கு

செல்வமுடன்,  ஞானமுமே
    கைகூடுமே !  (2)