ॐ

psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

நவராத்திரி கொலு படி பாட்டு

🕉️ அம்பாள் / தேவி
Originals

🎵 Watch/Listen on YouTube


மண்ணால் செய்த பொம்மைகளை
இந்நாள் வைத்து பூஜித்தால்..
அம்பாள் வந்து அருள்வாளே…!
ஐஸ்வர்யங்களும் தருவாளே ! (2)

கோரஸ்:
துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி-திரு
அருள் மிகும் ஒன்பது ராத்திரி ! (2)

சரணம் – 1
————–

ஒன்றாம் கொலுப்படி வைப்போம் செடி,கொடி
ஓரறிவுள்ள உயிர்களையே ! (2)
இரண்டாம் படியினில் ஈரறி வுயிர்கள்
நத்தை, சங்கு…இதுபோலே…
மூன்றாம் படியினில்…கரையான், எறும்பு..
நான்காம் படியினில் நண்டு, வண்டு (2)
ஐந்தாம் படியினில் பறவை, மிருகம்…
அமைத்தே நாமும் வணங்கிடுவோம் !


கோரஸ்:
துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி-திரு
அருள் மிகும் ஒன்பது ராத்திரி ! (2)

சரணம் – 2
————–
ஆறாம் கொலுப்படி…மனிதரின் பொம்மை..
ஆறாம் அறிவே நம்பெருமை ! (2)
ஏழாம் படியினில் ரிஷிகளின் உருவம்
ரமணர் போன்ற குரு வடிவம் !
எட்டாம் படியில் தேவரை வைப்போம்
எட்டா வளங்களும் அடைந்திடுவோம் ! (2)
ஒன்பதாம் படியில் முப்பெருந்தேவியர்
மும்மூர்த்தியுடனே அமர்வாரே !

(மண்ணால் செய்த)