ॐ

psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

பாலா வினோதம் !

🕉️ அம்பாள் / தேவி ஸ்ரீ பாலாம்பிகை
Originals


மாறாத வாலைப்பருவம்
பாலாவே உந்தன் உருவம் (2)
 
தாயாராய் உலகைக் காக்கும்
லீலா வினோதம்
லீலா வினோதம்
 
கோரஸ்:
பாலாம்பிகே…ஜகதாம்பிகே…
பாலாம்பிகே…ஜகதாம்பிகே… (2)
 
சரணம் 1
———–
 
பராசக்தி தேவியின் திரு அவதாரம் !
பண்டாசுரன் வதமுடித்த பெரு வீரம் ! (2)
 
பட்டுப் பாவாடை தான்சூடி
சுட்டிப் பெண்ணாகத் தெரிகின்றாய் ! (2)
பக்தர் கூப்பிடும் குரல்கேட்டு
“சட்”டென ஓடி வருகின்றாய் !(2)
 
கோரஸ்:
பாலாம்பிகே…ஜகதாம்பிகே…
பாலாம்பிகே…ஜகதாம்பிகே… (2)
 
சரணம் 2
———–
தேவி வழிபாட்டில்நீ முழுமுதல் நாயகி !
தேவர்களும் பதம் பணியும் த்ரிபுர சுந்தரி ! (2)
 
உன்னைத் தொழுதாலே ஸ்ரீலலிதை 
அருளும் கைகூடும் தானன்றோ!(2)
 
கன்னிப் பெண்ணாக குமரியிலே 
காட்சி தருவதும் நீயன்றோ?(2)
 
கோரஸ்:
பாலாம்பிகே…ஜகதாம்பிகே…
பாலாம்பிகே…ஜகதாம்பிகே… (2)
 
மாறாத வாலைப்பருவம்
பாலாவே உந்தன் உருவம் 
 
தாயாராய் உலகைக் காக்கும்
லீலா வினோதம்
லீலா வினோதம்
 
கோரஸ்:
பாலாம்பிகே…ஜகதாம்பிகே…
பாலாம்பிகே…ஜகதாம்பிகே… (2)
ஜகதாம்பிகே
ஜகதாம்பிகே
ஜகதாம்பிகே