ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம் தமிழில்
1)
அன்னை தேவகியின் ஆனந்தக் காரணனே !
அன்பின் வசுதேவர் அவர்தனயன் ஆனவனே ! (2)
கம்சன், சானூரன் வதமுடித்த நாயகனே ! (2)
தரணி யதன்குருவாம் கண்ணனுக்கு வந்தனமே ! (2)
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே

2)
மின்னும் ரத்தினத்து கங்கணத்தில் ஜொலிப்பவனே !
நீல மலர்மாலை தனைசூடி ஒளிர்பவனே ! (2)
இன்னும் ஆபரணம் அழகேற்றும் ஸ்ரீதரனே ! (2)
தரணி யதன்குருவாம் கண்ணனுக்கு வந்தனமே ! (2)
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே
3)
மிளிரும் சுருள்முடியில் மோகனமாய் ஆனவனே !
மயக்கும் முழுமதியின் நிகரழகு ஆனவனே ! (2)
ஒளிரும் குண்டலங்கள் காதணியாய் கொண்டவனே ! (2)
தரணி யதன்குருவாம் கண்ணனுக்கு வந்தனமே ! (2)
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே
4)
மணக்கும் மந்தாரப் பூவாசம் கொண்டவனே !
மயிலின் எழிற்தோகை மகுடமதில் கொண்டவனே ! (2)
மயக்கும் புன்னகையும் நாற்கரமும் கொண்டவனே ! (2)
தரணி யதன்குருவாம் கண்ணனுக்கு வந்தனமே ! (2)
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே
5)
ஆயர் குலம்வந்த மேலான ரத்தினமே !
முழுதாய் மொட்டவிழ்ந்த தாமரைக்கண் கொண்டவனே ! (2)
நீல முகிலொத்த திருமேனி கொண்டவனே ! (2)
தரணி யதன்குருவாம் கண்ணனுக்கு வந்தனமே ! (2)
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே
6)
ராதா ருக்மணியின் லீலா விநோதனே !
தூய துளசிமணம் தனைவிரும்பும் மாதவனே ! (2)
பீதாம் பரத்தாடை தனிலென்றும் ஒளிர்பவனே ! (2)
தரணி யதன்குருவாம் கண்ணனுக்கு வந்தனமே (2)
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே
7)
கொஞ்சும் கோபியரின் மார்போடு அணைந்தவனே !
ஈசன், ஸ்ரீலட்சுமி உறைகின்ற மேனியனே ! (2)
மஞ்சள் குங்குமத்தை மார்போடு தரித்தவனே ! (2)
தரணி யதன்குருவாம் கண்ணனுக்கு வந்தனமே (2)
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே
8)
சங்கு சக்கரமும் கரமேந்தும் கேசவனே !
காட்டு மலர்கோர்த்த மாலையினை தரித்தவனே ! (2)
தங்கத் திருமார்பில் ஸ்ரீவத்சம் கொண்டவனே ! (2)
தரணி அதன்குருவாம் கண்ணனுக்கு வந்தனமே ! (2)
கிருஷ்ணன் அஷ்டகமாம் இதனைஅதி காலையிலே
படித்தால் பல கோடி ஜென்மங்களின்
பாவம் நிச்சயமாய் பறந்தோடும்…
கோடி புண்ணியமும் தான் கூடும் !