ஸ்ரீ லலிதா பஞ்ச ரத்னம் தமிழில்
1)
சிவந்த கொவ்வை கனிகள்போல்
சிவந்திருக்கும் இதழ்களும்
விரிந்து செவியின் வரையிலும்
அகண்டிருக்கும் கண்களும்
ஒளிரும் முத்து கவர்ந்திடும்
அழகுமிகுந்த நாசியும்
மிளிரும் லலிதை முகத்தினை
வைகறையில் நினைக்கிறேன் !
Chorus:
அம்பிகே ! லலிதம்பிகே !
2)
தங்க வளையல் சூடிடும்!
தளிர்விரலில் மோதிரம் !
அங்கு சமும் கரும்புடன்
மலர்களம்பு ஏந்திடும் !
வரங்கள் அருளும் கற்பகக்
கொடியைப்போன்ற லலிதையின்
கரங்கள் அதனை அனுதினம்
காலையிலே துதிக்கிறேன் !
Chorus:
அம்பிகே ! லலிதம்பிகே !
3)
வாழ்வு என்னும் கடலினைக்
கடக்கஉதவும் ஓடமாம்
வாழ்த்தி ப்ரம்மன், தேவரும்
வணங்குகின்ற பாதமாம் !
ரேகை யாக சக்கரம்
கொடியும்,மலரும் கொண்டதாம்!
தாளைப் பணிந்து லலிதையை
காலையிலே வணங்குவேன் !
Chorus:
அம்பிகே ! லலிதம்பிகே !
4)
பரம சிவனின் துணையவள் !
பவானிஎனும் பெயரினள் !
பரம தூய கருணையள் !
மூன்றுதொழிலும் செய்பவள் !
மறைகள் போற்றும் தேவியள் !
சொல்லிலடங்கா வடிவினள் !
கலைகள் தந்த லலிதையை
காலையிலே துதிக்கிறேன் !
Chorus:
அம்பிகே ! லலிதம்பிகே !
5)
ஜகத் ஜனனி, சாம்பவி
கமலா, காமேஸ்வரி !
வாக்தேவி, திரிபுர
ஈஸ்வரி, மாஹேஸ்வரி !
என்று லலிதை உந்தனின்
நாமங்களை பக்தியாய்
என்றும் காலை வேளையில்
மனம்வுந்து உரைக்கிறேன் !
Chorus:
அம்பிகே ! லலிதம்பிகே !
6)
லலிதை பஞ்ச ரத்தினம்
இதனை சொல்லுவாருக்கு
லலிதை அவளின் அருளினால்
பாக்கியங்கள் சேருமே !
செல்வம், அறிவு, இன்பமும்
அளவிலாத புகழுமே ..
எல்லை இன்றி கூடுமே !
நலங்கள் யாவும்சேருமே !
Chorus:
அம்பிகே ! லலிதம்பிகே ! (2)