மதுராஷ்டகம் தமிழில்
1)
இதழ்கள் அழகு ! – அதன்
குறுநகை அழகு !
MUSIC
இதழ்கள் அழகு ! – அதன்
குறுநகை அழகு !
முகமும் அழகு ! – அதில்
விழிகளும் அழகு !
இதயம் அழகு – இளம்
தோரணை அழகு ! (2)
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
அழகோ அழகு !
கண்ணனே அழகு !
2)
வார்த்தைகள் அழகு ! – உன்
வளைவுடல் அழகு !
நடத்தையும் அழகு ! – நீ
உடுப்பவை அழகு !
அசைவுகள் அழகு ! – உன்
நகர்வுகள் அழகு ! (2)
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
அழகோ அழகு !
கண்ணனே அழகு !
3)
குழலும் அழகு !- கால்
துகளும் அழகு !
கரங்கள் அழகு – உன்
பதங்கள் அழகு !
நடனம் அழகு – உன்
நட்பும் அழகு ! (2)
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
அழகோ அழகு !
கண்ணனே அழகு !
4)
உண்பதும் அழகு ! – நீ
உறங்குதல் அழகு !
பருகுதல் அழகு – நெற்றித்
திலகமும் அழகு !
ரூபமும் அழகு – உன்
கானமும் அழகு ! (2)
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
அழகோ அழகு !
கண்ணனே அழகு !
5)
துறு துறு அழகு ! – வெண்ணைத்
திருடுதல் அழகு !
குறும்புகள் அழகு !- உன்
காரியம் அழகு !
கடப்பதும் அழகு ! – ஓய்
வெடுப்பதும் அழகு ! (2)
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
அழகோ அழகு !
கண்ணனே அழகு !
6)
மாலைகள் அழகு ! – உன்
முணுமுணுப்பும் அழகு !
யமுனையும் அழகு ! – அதன்
அலைகளும் அழகு !
நீரும் அழகு – அதில்
மலர்களும் அழகு ! (2)
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
அழகோ அழகு !
கண்ணனே அழகு !
7)
கோபியர் அழகு – உன்
லீலைகள் அழகு !
சேர்ந்தால் அழகு ! – நீ
விடுத்தால் அழகு !
பார்வையும் அழகு – உன்
பாவனை அழகு ! (2)
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
அழகோ அழகு !
கண்ணனே அழகு !
8)
கோவினம் அழகு ! – மேய்க்கும்
கோலும் அழகு !
ஆயர்கள் அழகு ! – உன்
ஆக்கங்கள் அழகு !
வல்ல
மை அழகு ! – உன்
வெற்றிகள் அழகு ! (2)
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
மதுரா மன்னனுன் உலகமே அழகு !
அழகோ அழகு !
கண்ணனே அழகு !