psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ சத்யநாராயணா ஆரத்தி தமிழில்

🕉️ ஸ்ரீ சத்யநாராயண ஸ்வாமி
Translations

🎵 Watch/Listen on YouTube


ஓம் ஜெய லட்சுமி ரமணா ! – ஸ்வாமி

ஸ்ரீ லட்சுமி ரமணா !

சத்ய நாராயண சுவாமி !

தடைகளை உடைத்திடுவாய் !

ஸ்ரீ ஜெய லட்சுமி ரமணா !

 

ரத்தினம் பதித்தசிம் மாசனம்

அற்புதம் உன் ராஜ்யம் !

மிக அற்புதம் உன் ராஜ்யம் !

நாரதர் செயும்திரு மஞ்சனம் !

கேட்குமே மணி நாதம் !

ஸ்ரீ ஜெய லட்சுமி ரமணா !

 

கலியுகக் காரணா ! பூரணா !

ஏழைக்கும் காட்சி தந்தாய் ! – ஒரு

ஏழைக்கும் காட்சி தந்தாய் ! 

முதிய அந்தணன் ஆகி…-ஒரு

முதிய அந்தணன் ஆகி…

பொன் பொருள் அருள் செய்தாய் !

ஸ்ரீ ஜெய லட்சுமி ரமணா !

 

காட்டினில் திரிபவன், வறியவன்

அவனுக்கும் தயை செய்தாய் !- சுவாமி

அவனுக்கும் தயை செய்தாய் !

நாட்டின் மன்னன் சந்திரசூடன்

அவனுக்கும் அருள் செய்தாய் !

ஸ்ரீ ஜெய லட்சுமி ரமணா !

 

வைசியன் மனதினை மாற்றியே

பக்தியை நீ தந்தாய் ! – பெரும்

பக்தியை நீ தந்தாய் !

வையக வாழ்வினில் அவனுக்கு

வளமருள் நீ செய்தாய் !

ஓம் ஜெய லட்சுமி ரமணா !

 

வைசியன் பக்தியை சோதிக்க

முதியவன் போல் சென்றாய் ! – ஒரு

முதியவன் போல் சென்றாய் !

இலைகளை தழைகளை மாற்றி

பெரும் செல்வம் செய்தாய் !

ஓம் ஜெய லட்சுமி ரமணா !

 

மன்னவன் காட்டினில் வணங்கினான்

இடையர்கள் அவருடனே…-ஆயர்

குலத்தினர் அவருடனே..

நினைத்தது யாவையும் அடைந்தான் !

தயாள ஹரி உன்னால் !

ஓம் ஜெய லட்சுமி ரமணா !

 

படைக்கிறோம் நீ மிக விரும்பும்

வாழைப் பழங்களையே ! – நீ

விரும்பிடும் பழங்களையே !

தூபம், தீபம், துளசி

சேர்த்தோம் ஏற்பாயே !

ஓம் ஜெய லட்சுமி ரமணா !

 

லட்சுமி ரமணனுன் ஆரத்தி

பாடிடுவார் எவரோ ! – சுவாமி

பாடிடுவார் எவரோ !

செல்வ வளம், சு

  1. கம் பெறுவார் !

வாழ்நாள் முழுவதுமே !

ஓம் ஜெய லட்சுமி ரமணா !