psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஆனித் திருமஞ்சனம் சிறப்பு பாடல்

🕉️ சிவபெருமான்
Originals

🎵 Watch/Listen on YouTube


அபிஷேகம் செய்தால் அகமகிழும் ஈசனுக்கு
ஆனியிலே திருமஞ்சனம் !
அலங்கார மேனியிலே அருள்வாசம் சேர்த்திடுமே
பன்னீரில் தோய்சந்தனம் ! (2)
 
அதிகாலை வேளையிலே…ஆனிஉத் திரத்திலே
சிவகாமி, நடராஜர் ஆனந்த தாண்டவம் !
அழகான திருக்காட்சி அதைக்காணும் கண்களே
செய்ததே பெரும்பாக்கியம் !

கோரஸ்:
சிவநாதன் போற்றி !
சிவகாமி போற்றி ! (2)

சரணம் 1
—-
பதம் தூக்கி சிதம்பரத்தான் திருநடனம் ஆடி
பதஞ்சலி முனிவருக்கு அருள்செய்த திருநாள் ! (2)
தேவர்களின் நாட்பொழுதில் அந்திப்பொழுதாகும்
மாதம் நல்ல ஆனியிலே உற்சவமாய் பெருநாள் ! (2)
குருந்தைமரம் அதனடியில் மணிவாசகர்க்கு (2)
குருவாகி சிவனாரும் உபதேசம்செய்த நாள் !

கோரஸ்:
சிவநாதன் போற்றி !
சிவகாமி போற்றி ! (2)

அபிஷேகம் செய்தால் அகமகிழும் ஈசனுக்கு
ஆனியிலே திருமஞ்சனம் !


சரணம் 2
—-
ஐந்தெழுத்து மந்திரத்தான் ஆனந்த நடனம்
ஐந்தொழிலை உணர்த்துகின்ற அற்புதமாம் கோலம் ! (2)
ஐந்து சபை அவைகளிலே ஆகாயம் ஆக…
அகிலமெலாம் நேர்மறையாய் அதிர்வலைகள் தாளம் ! (2)
அம்பலத்தில் ஆடுபவன் மஞ்சனத்தைக் காண..(2)
மங்கலங்கள் அவைசேரும் நம்வாழ்வில் நாளும் !

கோரஸ்:
சிவநாதன் போற்றி !
சிவகாமி போற்றி ! (2)

அபிஷேகம் செய்தால் அகமகிழும் ஈசனுக்கு
ஆனியிலே திருமஞ்சனம் !
அலங்கார மேனியிலே அருள்வாசம் சேர்த்திடுமே
பன்னீரில் தோய்சந்தனம் !
 
அதிகாலை வேளையிலே…ஆனிஉத் திரத்திலே
சிவகாமி, நடராஜர் ஆனந்த தாண்டவம் !
அழகான திருக்காட்சி அதைக்காணும் கண்களே
செய்ததே பெரும்பாக்கியம் !

கோரஸ்:
சிவநாதன் போற்றி !
சிவகாமி போற்றி ! (2)
நடராஜன் போற்றி !
நடராஜன் போற்றி !
நடராஜன் போற்றி !
நடராஜன் போற்றி !