psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ ராமச்சந்திர மங்கலம்

🕉️ ஸ்ரீ ராமர்
Translations

🎵 Watch/Listen on YouTube


1)

கேட்டதெல்லாம் தருபவனாம்,

ஜனகர்மகள் ஜானகியின்…

மனம்கவர்ந்த ராமனுக்கு மங்களமாகட்டும் !

 

2)

கோசலைமகன் இன்முகனாம்,

பக்தர்களைக் காப்பவனாம்

இந்த்ரன்தொழும் ராமனுக்கு மங்களமாகட்டும் !

 

3)

 

மாலையினை தரித்தவனாம்,

சந்தனத்து மேனியனாம்

திலமிட்ட அழகனுக்கு மங்களமாகட்டும் !

 

4)

 

குண்டலங்கள் பூண்டவனாம்,

துளசிமாலை தரித்தவனாம்

கார்முகில்போல் தேகனுக்கு மங்களமாகட்டும் !

 

5)

தேவகியின் திருமகனாம்,

தேவர்களின் தலைமகனாம்,

சீலகுரு ராமனுக்கு மங்களமாகட்டும் !

 

6)

 

முழுநிலவு முகத்தவனாம்,

மலர்விழிகள் கொண்டவனாம்,

கருடன்மீது வருவோனுக்கு மங்களமாகட்டும் !

 

7)

மாசிலாத தூயவனாம்,

மறைகளிலே பண்டிதனாம்,

மலர்முகமாய் அருள்வோனுக்கு மங்களமாகட்டும் !

 

8)

 

ராமதாசர் மெல் இதய

கமலமலர் உறைபவனாம்,

பத்ரகிரி தேவனுக்கு மங்களமாகட்டும் !