psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஸ்ரீ ஹனுமான் 108 போற்றி

🕉️ ஸ்ரீ ஹனுமான்
Originals

🎵 Watch/Listen on YouTube


 

1)

ஞானத்தின் கடலாய் சிறந்தவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

ஞாலத்தின் ஒளியே ! நிரந்தரனே ! ஜெய ஹனுமானே போற்றி !

வானர தேவனாய் வந்தவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

ராமனின் தூதனாய் சென்றவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

அஞ்சனை மைந்தா ! ஆஞ்சநேயனே ! ஜெய ஹனுமானே போற்றி !

அதி பலிசாலியே ! மகாவீரனே ! ஜெய ஹனுமானே போற்றி !

பொன்நிற மேனியில் ஜொலிப்பவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

குண்டலம் சூடிய குணவானே ! ஜெய ஹனுமானே போற்றி !

 

கோரஸ்:

ஜெய ஹனுமானே போற்றி !

நற் குணவானே போற்றி ! (2)

 

2)

முடிந்த சுருள்முடி அழகினனே ! ஜெய ஹனுமானே போற்றி !

கொடியும் , இடியும் தரித்தவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

சங்கர சிவனார் திருவடிவே ! ஜெய ஹனுமானே போற்றி !

சங்கடம் யாவும் தீர்ப்பவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

வஜ்ரதேகனே ! வாயுவின் தனையா ! ஜெய ஹனுமானே போற்றி !

நற்குண சீலா ! பேரறிவாளா ! ஜெய ஹனுமானே போற்றி !

ராமர் சரிதையைக் கேட்டு ரசிப்பவா ! ஜெய ஹனுமானே போற்றி !

ராமர், சீதைஉன் நெஞ்சில் வசிக்கிறார் ! ஜெய ஹனுமானே போற்றி !

 

கோரஸ்:

ஜெய ஹனுமானே போற்றி !

நற் குணவானே போற்றி ! (2)

 

3)

 

சிறு உருவாகி சீதைமுன் நின்றாய் ! ஜெய ஹனுமானே போற்றி !

பெரு உருவெடுத்து இலங்கை எரித்தாய் ! ஜெய ஹனுமானே போற்றி !

பீம ரூபத்தில் அசுரரை அழித்தாய் ! ஜெய ஹனுமானே போற்றி !

ராமச் சந்திரனின் பணிகளை முடித்தாய் ! ஜெய ஹனுமானே போற்றி !

லட்சுமணன் உயிர்த்தெழ மலை கொணர்ந்தாயே ! ஜெய ஹனுமானே போற்றி !

மெச்சியே ராமனும் உனைஅணைத்தானே ! ஜெய ஹனுமானே போற்றி !

“சோதரன்” என்றுனை ராமன் அழைத்தான் ! ஜெய ஹனுமானே போற்றி !

ஆதிசேஷனும் உன்புகழினை உரைத்தான் ! ஜெய ஹனுமானே போற்றி !

 

கோரஸ்:

ஜெய ஹனுமானே போற்றி !

நற் குணவானே போற்றி ! (2)

 

 

4)

பாரெலாம் போற்றும் உன்புகழை ! ஜெய ஹனுமானே போற்றி !

வார்த்தையில் அடங்குமோ உன்பெருமை? ஜெய ஹனுமானே போற்றி !

சுக்ரீ வனுக்கருள் செய்தவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

திக்பா லகரும் துதிப்பவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

அரசனாய் ஆக்கினாய் வீடணனை! ஜெய ஹனுமானே போற்றி !

பழமென விழங்கினாய் பகலவனை ! ஜெய ஹனுமானே போற்றி !

வாயில் சுமந்தாய் கணையாழி ! ஜெய ஹனுமானே போற்றி !

பாய்ந்தே கடந்தாய் பெரும் ஆழி ! ஜெய ஹனுமானே போற்றி !

 

கோரஸ்:

ஜெய ஹனுமானே போற்றி !

நற் குணவானே போற்றி ! (2)

 

5)

மலையும் கூடவே மடுஉனக் கேதான் ! ஜெய ஹனுமானே போற்றி !

இலையே முடியாசெயல் உனக் கேதான் ! ஜெய ஹனுமானே போற்றி !

ராமனின் ராஜ்ஜிய காவலனே ! ஜெய ஹனுமானே போற்றி !

யாரங்கு வருவார் உனைமீறி? ஜெய ஹனுமானே போற்றி !

உன்புகழ் போற்றும் மூவுலகும் ! ஜெய ஹனுமானே போற்றி !

உன்பலம் உனக்கே தான் தெரியும் ! ஜெய ஹனுமானே போற்றி !

உனைசரண் அடைந்தால் பேரின்பம் ! ஜெய ஹனுமானே போற்றி !

உன்னருள் இருந்தால் ஏதுபயம் ? ஜெய ஹனுமானே போற்றி !

 

கோரஸ்:

ஜெய ஹனுமானே போற்றி !

நற் குணவானே போற்றி ! (2)

 

6)

நாவினி தாகும் உனைப்பாட ! ஜெய ஹனுமானே போற்றி !

தீவினைத் தீண்டுமோ உனைநாட ! ஜெய ஹனுமானே போற்றி !

வலி,பிணி தீர்க்கும் உன்நாமம் ! ஜெய ஹனுமானே போற்றி !

கலித் துயர் நீக்கும் உன்நாமம் ! ஜெய ஹனுமானே போற்றி !

அடியவர்க் கருள் தரும் கற்பகமே ! ஜெய ஹனுமானே போற்றி !

அடிபணிந்தே தொழும் அற்புதமே !ஜெய ஹனுமானே போற்றி !

ஈரிரு யுகம் உன் புகழொலிக்கும் ! ஜெய ஹனுமானே போற்றி !

ஈரேழு ஜகமுன் புகழ் ஜொலிக்கும் ! ஜெய ஹனுமானே போற்றி !

 

கோரஸ்:

ஜெய ஹனுமானே போற்றி !

நற் குணவானே போற்றி ! (2)

 

7)

முனிவரை, தேவரைக் காப்பவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

தனியாய் அசுரரை அழிப்பவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

நான்கிரு சித்தியும் தருபவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

ஜானகி தேவியின் பெருவரமே ! ஜெய ஹனுமானே போற்றி !

ராம பக்தியின் சாரம்நீ ! ஜெய ஹனுமானே போற்றி !

ராம தாசனே என்றும்நீ ! ஜெய ஹனுமானே போற்றி !

தீர பராக்ரம சுந்தரனே ! ஜெய ஹனுமானே போற்றி !

வீர கேசரி திருமகனே ! ஜெய ஹனுமானே போற்றி !

 

கோரஸ்:

ஜெய ஹனுமானே போற்றி !

நற் குணவானே போற்றி ! (2)

 

8)

கோள்களின் தோஷம் தீர்ப்பவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

வாலிலே மணியினை அணிந்தவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

மாயைகள் யாவும் அறுப்பவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

தாயார் தேவியின் அன்பினனே ! ஜெய ஹனுமானே போற்றி !

ஹரியின் சிறிய திருவடியே ! ஜெய ஹனுமானே போற்றி !

அறிவுச் செல்வம் தருவாயே ! ஜெய ஹனுமானே போற்றி !

எங்கும் சுற்றும் வானரனே ! ஜெய ஹனுமானே போற்றி !

தங்கும் மங்கலம் தருபவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

 

கோரஸ்:

ஜெய ஹனுமானே போற்றி !

நற் குணவானே போற்றி ! (2)

 

9)

ராமநாமமே உன்மந்திரமே ! ஜெய ஹனுமானே போற்றி !

பீமனுக் குதவி செய்தவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

வேகம், விவேகம் கொண்டவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

வேதம், மறைகளின் திருவுருவே ! ஜெய ஹனுமானே போற்றி !

எதிர்வரும் நிகழ்வுகள் உணர்ந்தவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

எதிரியர் ஆணவம் தகர்ப்பவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

சீதையின் சோகம் தீர்த்தவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

கீதை பாஷ்யனே ! பண்டிதனே ! ஜெய ஹனுமானே போற்றி !

 

கோரஸ்:

ஜெய ஹனுமானே போற்றி !

நற் குணவானே போற்றி ! (2)

 

10)

 

வெண்ணெய் அலங்காரம் விரும்பி டுவாய் ! ஜெய ஹனுமானே போற்றி !

விண்ணில் சிறகின்றி பறந்திடுவாய்! ஜெய ஹனுமானே போற்றி !

உளுந்து வடை மாலை உவந்தேற்பாய் !ஜெய ஹனுமானே போற்றி !

தெளிந்த பால் வண்ண உளமுடையாய்! ஜெய ஹனுமானே போற்றி !

துளசி மாலையினை அணிந்திடுவாய்!ஜெய ஹனுமானே போற்றி !

தவசி திருக்கோலம் அமர்ந்திடுவாய்! 

ஜெய ஹனுமானே போற்றி !

ப்ரம்மச்சர்யத்தைக் கொண்டவனே! ஜெய ஹனுமானே போற்றி !

ப்ரம்மன் ஆசியை பெற்றவனே! ஜெய ஹனுமானே போற்றி !

 

கோரஸ்:

ஜெய ஹனுமானே போற்றி !

நற் குணவானே போற்றி ! (2)

 

11)

கதா யுதத்தை கையில் ஏந்துவாய் ! ஜெய ஹனுமானே போற்றி !

சதா ஸ்ரீராம நாமம் சொல்லுவாய் ! ஜெய ஹனுமானே போற்றி !

சொல்லின் செல்வனே ! வாக்கில் தூயனே ! ஜெய ஹனுமானே போற்றி !

அள்ளித் தந்திடும் அன்பு நேயனே ! ஜெய ஹனுமானே போற்றி !

சிரஞ் சீவியாய் வாழும் சீலனே ! ஜெய ஹனுமானே போற்றி !

பரஞ் ஜோதிசிவன் பக்த சீடனே ! ஜெய ஹனுமானே போற்றி !

கர்ம யோகியாய்த் திகழ்ந் திடுவோனே ! ஜெய ஹனுமானே போற்றி !

தர்ம நெறிகாக்கும் தீரசத்யனே ! ஜெய ஹனுமானே போற்றி !

 

கோரஸ்:

ஜெய ஹனுமானே போற்றி !

நற் குணவானே போற்றி ! (2)

 

 

12)

இசையில் ஞானியாய் சிறந்தவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

திசைகள் தனைவென்று பறந்தவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

அமாவாசையில் பிறந்தவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

அசோகவனத்தை எரித்தவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

அர்ஜுனன் கொடியாய் ஆனவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

அற்புத லீலைகள் செய்தவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

பலமும், தைர்யமும் தருபவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

நலமும், வளமும் சேர்த்திடுவாய் ! ஜெய ஹனுமானே போற்றி !

 

கோரஸ்:

ஜெய ஹனுமானே போற்றி !

நற் குணவானே போற்றி ! (2)

 

13)

துளசிதாசரின் கவிச்சொல் ஆனவா! ஜெய ஹனுமானே போற்றி !

வ்யாசராயரின் சிலைக்கல் ஆனவா ! ஜெய ஹனுமானே போற்றி !

ராமதாசரின் மகனை மீட்டவா ! ஜெய ஹனுமானே போற்றி !

த்யாகராஜர்க்கு காட்சி தந்தவா ! ஜெய ஹனுமானே போற்றி !

ராகவேந்த்ரர் தொழும் ஐமுகதேவா ! ஜெய ஹனுமானே போற்றி !

மாத்வாச்சார்யராய் மறு அவதாரா ! ஜெய ஹனுமானே போற்றி !

உருகும் பக்தர்க்கு குருவுமானவா ! ஜெய ஹனுமானே போற்றி !

உருகும் பக்தனாய் தானுமானவா ! ஜெய ஹனுமானே போற்றி !

 

கோரஸ்:

ஜெய ஹனுமானே போற்றி !

நற் குணவானே போற்றி ! (2)

 

வெற்றிலை மாலை தரிப்பவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

வெற்றிகள் எதிலும்

தருபவனே ! ஜெய ஹனுமானே போற்றி !

பற்றுகள் அறுத்த பாக்கியனே! ஜெய ஹனுமானே போற்றி !

பற்றினோம் உந்தன் திருப்பதமே! ஜெய ஹனுமானே போற்றி !

 

கோரஸ்:

  • ஜெய ஹனுமானே போற்றி !

நற் குணவானே போற்றி ! (2)