ஸ்ரீ தர்மசாஸ்தா பஞ்சாட்சர ஸ்தோத்திரம் தமிழில்
1)
ஹரிஹரனின் திருமகனே !
அல்லல்களைத் தீர்ப்பவனே ! (2)
ப்ரணவத்தின் திருவடிவே !
சபரிபீடம் திகழ்பவனே !
சாஸ்தாவே ! பக்தியுடன்
வணங்குகிறேன் உன்னையே ! (2)
2)
மூவுலகும் காப்பவனே !
முழுநிலவு முகத்தவனே ! (2)
மூவுலகின் உயிர்களுமே
பணிந்தேற்றும் தேவனே !
சாஸ்தாவே ! பக்தியுடன்
வணங்குகிறேன் உன்னையே ! (2)
3)
வேட்டைவிரும்பும் சூரனே !
காமன்போல அழகனே ! (2)
நாட்டமுடன் பூதமைந்தும்
சேவைசெய்யும் நாதனே !
சாஸ்தாவே ! பக்தியுடன்
வணங்குகிறேன் உன்னையே ! (2)
4)
மங்கலங்கள் தருபவனே !
பக்தர்கருள் தெய்வமே ! (2)
பந்தளத்து வம்சமே !
புலியிலேறும் வீரனே !
சாஸ்தாவே ! பக்தியுடன்
வணங்குகிறேன் உன்னையே ! (2)
5)
உலகமெலாம் காப்பவனே !
யானைஏறி வருபவனே ! (2)
மலர்க்கரத்தில் ஒளிர்ந்திடும்
கரும்பை ஏந்தும்தேவனே !
சாஸ்தாவே ! பக்தியுடன்
வணங்குகிறேன் உன்னையே ! (2)
6)
கணத்திலருள் செய்பவனே !
யட்சினியர் அன்பினனே ! (2)
மனம்கவர்ந்த பூரணா
புஷ்கலாவின் துணைவனே !
சாஸ்தாவே ! பக்தியுடன்
வணங்குகிறேன் உன்னையே ! (3)
வணங்குகிறேன் உன்னையே !