psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

அமிர்தம் ராம ஜபம்

🕉️ ஸ்ரீ ராமர்
Translations

🎵 Watch/Listen on YouTube


rama

Youtube link

பல்லவி
———-
அமிர்தம்  ராம ஜபம்…(2)அதனை சுவைப்பாய் என்நாவே !

அமிர்தம்  ராம ஜபம்…அதனை சுவைப்பாய் என்நாவே ! (4)

சரணம்

1. பாவங்கள் யாவும் முற்றிலும் தீர்க்கும் !
பலவித பூரண பலன்களை சேர்க்கும் ! (2)
(அமிர்தம்  ராம ஜபம்…)

2. ஜனன மரண பயம், சோகங்கள் நீக்கும்
மறைகளின், ஆகம நெறிகளின் சாரம் ! (2)
( அமிர்தம்  ராம ஜபம்…)

3. அண்டத்தைக் காத்து பாலனம் செய்யும் !
நம்பிடா பேரையும் தூயவன் ஆக்கும் ! (2)
( அமிர்தம்  ராம ஜபம்…)

4. தூய உயர் நெறியோர் மனதுறை கீதம் !
ஸ்ரீ சுகர், சௌனகர், கௌசிகர் சுவைத்த…(2)
( அமிர்தம்  ராம ஜபம்…)