சனீஸ்வரன்

சரணம் சனீஸ்வர‌ பகவானே !

யோகங்கள் அருளும் சனி பகவானே ! பாவ புண்ணிய பலன் தருவோனே ! (2) காகம் மீதிலே உலவிடுவோனே ! (2) காலம் என்னும் ஓடம் தன்னை கரை சேர்த்திடுமோர் ஈசன் நீயே ! கோரஸ்: சங்கர ஹர சிவ அம்சமாய் வந்தாய் ! சரணம் ஸ்ரீசனி பகவானே ! பொங்கியே நீவர மங்கலம் வருமே ! சரணம் சரணம் பகவானே ! (2) சூர்ய தேவனின் மைந்தனே ஈசா ! பார்வை தன்னிலே அருளிடும் நேசா ! (2) கார்ய சித்திகள் தந்திடுவோனே ! (2) வீர்யம் கூடிய‌ சக்தியும் நீயே ! சர் வேஸ்வரனே !