பெரியவா என்னும்

ஆல்பம்: ஸ்ரீ சந்திரசேகரா ! சங்கரா !

பாடியவர்: திரு. O.S.அருண்

எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்

————————————————————————– பெரியவா என்னும் சொல்லுக்கே… உரியவர் ஆனாய் சங்கரா ! அரிய நல் வேதங்கள் எல்லாம் அறிந்த மெய் ஞானியே நீ சங்கரா ! (பெரியவா ) சரணம் – 1 காயத்ரி நீசெய்யும் கோலம் ! – அந்தக் காட்சியில் தெரியும் தெய்வீகம் ! காமாக்ஷி தேவி கடாக்ஷம் ! – உந்தன் காருண்ய முகத்தினில் ஜொலிக்கும் ! (பெரியவா ) சரணம் – 2 அருட்கரம் நீ காட்டும் போது – மெய் சிலிர்த்திடும் கணநேரம் போதும் ! இருளினை அகற்றிடும் விளக்கு – என் அகங்காரம் விரட்டும் உன் சிரிப்பு ! (பெரியவா )