psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

ஈஸ்வரன்…சனீஸ்வரன்

🕉️ ஸ்ரீ சனீஸ்வரன்
Originals

🎵 Watch/Listen on YouTube


Youtube link

யோகங்கள் அருள்கின்ற ஈஸ்வரன் !
காகம்மேல் வருகின்ற ஈஸ்வரன் ! (2)
பாவங்கள், புண்யங்கள் பலன்களை (2)
கூடாமல்..குறையாமல் தருகின்றவன்…! (2)

கோரஸ்:
ஈஸ்வரன்…சனீஸ்வரன்…
நள்ளாற்றுத் தலம் ஆளும் நாயகன் ! (2)

ஏழறை ஆண்டாக பொங்கி வரும் போதிலே
பொங்குமே வாழ்வில் மங்கலம் ! (2)
ஏழையும் செல்வந்தன் ஆகிடுவான்…
ஏற்றங்கள் பலவாக கண்டிடுவான் வாழ்விலே…(2)
-புது மாற்றங்கள் கொண்டிடுவான் வாழ்விலே…(2)

கோரஸ்:
ஈஸ்வரன்…சனீஸ்வரன்…
நள்ளாற்றுத் தலம் ஆளும் நாயகன் !

அஷ்டம சனியாக வரும்போது
கஷ்டங்கள், நிவர்த்திக்கு பரிகாரமே ! (2)
எள்தீபம் அதை ஏற்றி படைப்போமே அன்புடனே
எள்ளன்னம் நைவேத்யமாகவே ! (2) –

அவன் அருள் என்றும் நமைகாக்கும் துணையாகியே ! (2)