கொலுவைக் காண வாருங்கோ !
வாருங்கோ ! வாருங்கோ ! எங்க வீட்டுக்கு !
கொலுவைக் காண வாருங்கோ ! எங்க வீட்டுக்கு ! (2)
குடும்பத்தோடு யாவரும் கூடி வாருங்கோ ! (2)
கோயில் கொண்ட அம்பிகையை வந்து பாருங்கோ ! (2)
(வாருங்கோ)
படிப்படியாய் நமைஉயர்த்தும் தத்துவத்தினை
பாங்குடனே சொல்லுகின்ற படிகள் வைத்துளோம் ! (2)
செடி கொடிகள் பூக்கள் சூழ்ந்த பூவனத்தையும்
சிறப்புடனே ஜொலிக்கும்படி செய்து வைத்துளோம் ! (2)
(வாருங்கோ)
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணமே !
செய்து பின்பு படைத்திடுவோம் நைவேத்தியமே ! (2)
சுவை சுவையாய் சுண்டல் வகை விநியோகமுமே !
சுமங்கலிக்கு மங்கலமாய் மஞ்சள் குங்குமமே ! (2)
(வாருங்கோ)