வேங்கடாசல நிலயம் – தமிழில்

பல்லவி
————–
வேங்கட மலை வாழும் வைகுண்ட ஸ்ரீ வாசன் !
மாசிலாத் தூயோன் தாமரைக் கண்ணன்…
சங்கு சக்ரம் கொண்ட சின்மய ரூபன்…
அனுபல்லவி
==========
நான்முகன் பணிந்திடுவோன் !
நாமங்கள் பல உடையோன் !
நாரதர், தும்புரு துதிரசித்திருப்போன் !
பாற்கடல் துயில்வோன் ! ஆத்மனாய் ஒளிர்வோன் !
(வேங்கட )
சரணம் 1
————
பாண்டவர் துணை நின்றான் !
கௌரவர் செருக்கறுத்தான் ! தீர பராக்ரம தேவன் !
அகல்யை சாபம், பயம் முடித்தவனாம் !
(வேங்கட )
சரணம் 2
————
மறைகள் யாவும் போற்ற..
உயிர்களின் உயிரானோன்…!
மகரகுண்டலம் அணி எழில் கோபாலன் !
பக்தரைக் காத்திடும் புரந்தர விட்டலன் !
(வேங்கட )