Varahi Aarti

- ஜெய வாராகி தாயே ! – அம்மா
ஜெய வாராகி தாயே !
கோரஸ்:
ஜெய வாராகி தாயே ! – அம்மா
ஜெய வாராகி தாயே !
மணி ஒலி எழுப்பிடும் சலங்கை
கோரஸ்:
நல்ல மணி ஒலி எழுப்பிடும் சலங்கை
உன் பதங்களை அலங்கரிக்கும் !
கோரஸ்:
ஓம் ஜெய வாராகி தாயே ! (2)
2)
சூடிய ஆடையோ செந்நிறம் !
கேட்குமே செந்தூரம் –
கோரஸ்:
புவி கேட்குமே செந்தூரம் !
ஆடிடும் பகைவரை வென்று
கோரஸ்:
இங்கு ஆடிடும் பகைவரை வென்று
சகத்தினைக் காப்பவளே !
கோரஸ்:
ஓம் ஜெய வாராகி தாயே ! (2)
3)
என்பிழை யாவையும் பொறுத்துநீ
ஞானத்தின் விளக்கேற்று ! –
மெய் ஞானத்தின் விளக்கேற்று !
விதித்தவை யாவுமே நலமாய்
கோரஸ்:
நீ விதித்தவை யாவுமே நலமாய்
ஆக்கியே காத்திடுவாய் !
கோரஸ்:
ஓம் ஜெய வாராகி தாயே ! (2)
4)
புவனத்தின் ஈஸ்வரி நீயே !
பரமேஸ்வரி தாயே! –
கோரஸ்:
அம்மா ! பரமேஸ்வரி தாயே!
விஸ்வேஸ்வரியும் நீயே !
கோரஸ்:
அம்மா விஸ்வேஸ்வரியும் நீயே !
என்றுனை புவி போற்றும் !
கோரஸ்:
ஓம் ஜெய வாராகி தாயே ! (2)
5)
வராகனாய் நாரணன் தோன்ற
நீஅவர் பலமானாய் !
கோரஸ்:
அம்மா நீஅவர் பலமானாய் !
ஜொலித்திடும் திருமுகத்தாலே
கோரஸ்:
உன் ஜொலித்திடும் திருமுகத்தாலே
சகமெலாம் ஒளிவீச…
கோரஸ்:
ஓம் ஜெய வாராகி தாயே ! (2)
6)
சரயூ நதிக்கரை தனிலே
அம்மா உன் கோயில் ! –
கோரஸ்:
எம் அம்மா உன் கோயில் !
அற்புதம், அதிசயம், அங்கே !
கோரஸ்:
வெகு அற்புதம், அதிசயம், அங்குன்
ஈடிலா எழிற் கோலம் !
கோரஸ்:
ஓம் ஜெய வாராகி தாயே ! (2)
7)
மனமென்னும் மடியினில் வைத்து
போற்றிடும் பக்தனுக்கு
கோரஸ்:
உனை போற்றிடும் பக்தனுக்கு
சிம்ம வாகினி உன்னருளால்..
கோரஸ்:
எழில் சிம்ம வாகினி உன்னருளால்..
வேண்டிய வரம் கிடைக்கும் !
கோரஸ்:
ஓம் ஜெய வாராகி தாயே ! (2)