psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

வல்லமை தாராயோ? வாராஹி

🕉️ அம்மன் ஸ்ரீ வாராகி

🎵 Watch/Listen on YouTube


 

  வல்லமை தாராயோ வாராகி?

வல்லமை தாராயோ வாராகி? – உன்

வலிமையால் எந்தன் வலி நீக்கி ! (2)

நல்லவை யாவையும் ஒன்றாக்கி..(2).

நலமருள் செய்வாயோ தாயாகி ?

 

கோரஸ்:

ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி !

ஜெய ஓம் வாராகி ஓம் !

ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி !

ஜெய ஓம் வாராகி ஓம் ! 

 

(வல்லமை)

 

விரட்டும் பகையினை தொலைந்திட துரத்து !

அரட்டும் பகட்டினை முற்றிலும் அகற்று ! (2)

துரத்தும் தீவினைகள் யாவையும் தீய்த்து..(2)

தொடரும் மங்கலம் எனநீ மாற்று ! (2)

 

கோரஸ்:

ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி ! ஓம் !

ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி ! ஓம் !

(வல்லமை)

 

சரணம் 2

————

 

ஒளிந்து தலைதூக்கும் ஆணவம் அழித்து

என்னுள் மெய்ஞான விளக்கினை ஏற்று ! (2)

கழிந்திடும் நாளெல்லாம் உன்பதம் பணிந்து (2)

கழித்திடும் வரத்தினை இக்கணம் வழங்கு ! (2)

  கோரஸ்:

ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி ! ஓம் !

ஜெய ஓம் வாராகி ! ஜெய ஓம் வாராகி

! ஜெய ஓம் வாராகி ! ஓம் !