psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

வார்த்தாளி ! வாராகி !

🕉️ ஸ்ரீ வாராகி
Originals

🎵 Watch/Listen on YouTube


வார்த்தாளி ! வாராகி ! தீர்ப்பாளே வினையெல்லாம்…
தூள்தூளாய் பொடியாக்கியே ! – அவள்
பார்த்தாலே போதும்  பார்விட்டு பகை ஓடும்
பார்க்கின்ற நொடிப்போதிலே…(2)

கோரஸ்:
வாராகி ! கோராகி ! வாராகியே !
சேய் எம்மைக் காப்பாயோ தாயாகியே ! (2)

அம்பிகையின் போர்படையின் தளபதியாய் ஆனாள் !
நம்பிவரும் பக்தருக்கு தயைநிதியாய் ஆனாள் ! (2)
போர்குணமும் தாய்மனமும் கலந்தவளாய் ஆனாள் ! (2)
கார் இருளில் முழுமதிபோல் மலர்ந்தவளாய் ஆனாள் ! (2)

கோரஸ்:
வாராகி ! கோராகி ! வாராகியே !
சேய் எம்மைக் காப்பாயோ தாயாகியே ! (2)
(வார்த்தாளி )
வாராக மூர்த்திக்கு புது சக்தி ஆனாள் !
நாரா யணன்கூட சிவ சக்தி ஆனாள் ! (2)
ஏர்கலப்பை ஆயுதமாய் கரத்தினிலே கொண்டாள் ! (2)
ஏற்றம்தரும் தெய்வமெனும் வரத்தினை கொண்டாள் ! (2)

கோரஸ்:
வாராகி ! கோராகி ! வாராகியே !
சேய் எம்மைக் காப்பாயோ தாயாகியே ! (2)

(வார்த்தாளி )