வா ! வா ! கண்ணா ! வா ! வா !

சின்ன சின்ன பதங்கள் வைத்து வந்திடுவாய் கண்ணா ! கண்ணா !
வண்ண வண்ணக் கோலமிட்டோம் ! வந்திடுவாய் கண்ணா ! கண்ணா ! (2)
Chorus:
வா ! வா ! கண்ணா ! வா ! வா !
வா ! வா ! கண்ணா ! வா ! வா ! (2)
சரணம் 1
———–
வசுதேவர் செல்லப்பிள்ளை பாலகிருஷ்ணனாக..
பசுக்கூட்டம் மேய்த்த சிறுவன் கோபாலகிருஷ்ணனாக(2)
கார்முகிலாய் தவந்துவரும் சின்னிகிருஷ்ணனாக…(2)
ஊர் போற்றும் உத்தமனாம் உன்னிகிருஷ்ணனாக…
Chorus:
வா ! வா ! கண்ணா ! வா ! வா !
வா ! வா ! கண்ணா ! வா ! வா ! (2)
சரணம் 2
———–
மண்ணைத் தின்று அண்டம் காட்டும் மாயகிருஷ்ணனாக..
வெண்ணையினைக் கள்ளம் செய்யும் நவநீதகிருஷ்ணனாக..(2)
விண்வெளியின் வண்ணமுடன் நீலகிருஷ்ணனாக..(2)
கண்ணழகால் மயக்குகின்ற ஜாலகிருஷ்ணனாக…
Chorus:
வா ! வா ! கண்ணா ! வா ! வா !
வா ! வா ! கண்ணா ! வா ! வா ! (2)
சரணம் 3
———–
கோபியர்கள் கொண்டாடும் கோபிகிருஷ்ணனாக…
கோவிந்தா என்னும் நாம வேங்கட கிருஷ்ணனாக…(2)
கோகுலத்தில் விளையாடும் கோகுல கிருஷ்ணனாக..(2)
கோவர்த்தன மலை தாங்கும் மோகன கிருஷ்ணனாக…
Chorus:
வா ! வா ! கண்ணா ! வா ! வா !
வா ! வா ! கண்ணா ! வா ! வா ! (2)
சரணம் 4
———–
ராதையளும் காதல் கொண்ட ராதாகிருஷ்ணனாக..
ராமனென, கண்ணனென…ராமகிருஷ்ணனாக…(2)
ராகங்கள் இசைக்கின்ற முரளிகிருஷ்ணனாக..(2)
ராட்சர்கள் வதமுடித்த ஸ்ரீஹரிகிருஷ்ணனாக…
Chorus:
வா ! வா ! கண்ணா ! வா ! வா !
வா ! வா ! கண்ணா ! வா ! வா ! (2)
சின்ன சின்ன பதங்கள் வைத்து வந்திடுவாய் கண்ணா ! கண்ணா !
வண்ண வண்ணக் கோலமிட்டோம் ! வந்திடுவாய் கண்ணா ! கண்ணா !
Chorus:
வா ! வா ! கண்ணா ! வா ! வா !
வா ! வா ! கண்ணா ! வா ! வா ! (2)