தீயான தேகத்துள்
தீயான தேகத்துள் ஜீ..வனாக…
காருண்யம் வழிந்தோடுமோ? – சிவ
காருண்யம் வழிந்தோடுமோ?(2)
அருணாச் சலமெனும் ஜோதி ! – அது
கருணா சாகர ஆதி ! (2)
அருளும்..சுடராய்…காட்டுமே ! – அது
அல்லல்தரும் வினை ஓட்டுமே !
கோரஸ்:
ஆதி யோகியே ! அண்ணாமலையே !
அருந்தவ ஒளியே !தாள் சரணம் ! (2)
தீயான தேகத்துள் ஜீ..வனாக…
காருண்யம் வழிந்தோடுமோ? – சிவ
காருண்யம் வழிந்தோடுமோ?
சரணம் 1
————–
தீயான வடிவென்று இருந்தாலுமே..
தாயுள்ளம் தனைக் கொண்டவா ! (2)
அடியார்கள் அவர் கோரும் வரம் யாவையும்..(2) – உட
னடியாக அருள்கின்ற எமதாண்டவா !
கோரஸ்:
ஆதி யோகியே ! அண்ணாமலையே !
அருந்தவ ஒளியே !தாள் சரணம் ! (2)
தீயான தேகத்துள் ஜீ..வனாக…
காருண்யம் வழிந்தோடுமோ? – சிவ
காருண்யம் வழிந்தோடுமோ?
சரணம் 2
———
திரு வண்ணாமலை மீது ஒளிர் தீபமே
இருள் நீக்கும் மெய்ஞானமே ! (2)
ஐம்பூதம் பணிந்தேற்றும் திருப்பாதமே (2) – மலை
வடிவான பேரக்னி உன்ரூபமே !
கோரஸ்:
ஆதி யோகியே ! அண்ணாமலையே !
அருந்தவ ஒளியே !தாள் சரணம் ! (2)
தீயான தேகத்துள் ஜீ..வனாக…
காருண்யம் வழிந்தோடுமோ? – சிவ
காருண்யம் வழிந்தோடுமோ?
அருணாச் சலமெனும் ஜோதி ! – அது
கருணா சாகர ஆதி !
அருளும்..சுடராய்…காட்டுமே ! – அது
அல்லல்தரும் வினை ஓட்டுமே !
கோரஸ்:
ஆதி யோகியே ! அண்ணாமலையே !
அருந்தவ ஒளியே !தாள் சரணம் ! (2)
அருந்தவ ஒளியே !தாள் சரணம் !
அண்ணாமலையே !தாள் சரணம் !