சூரிய பகவான் 108 போற்றி
சூரிய பகவானே போற்றி
1)
விடியல் தனைக் காட்டும் விண்ணவனே!
விரிந்து மலர்பூக்கச் செய்பவனே !
புதிய நாள்தரும் பகலவனே!
புவியில் இருள் விலகக் காரணனே !
அதிதி அவளன்புத் திருமகனே!
அக்கினி பிழம்பாய் ஒளிர் பவனே!
கதிரொளிச் சுடரே ! கனலுருவே!
காஸ்யப ரிஷியின் புதலவனே !
Chorus:
போற்றி ! போற்றி ! போற்றி !
ஆதி தேவனே போற்றி !
போற்றி ! போற்றி ! போற்றி !
ஜோதி ரூபனே ! போற்றி !
2)
அருண உதயமாய் வருபவனே !
அகிலம் தனில்வெப்பம் தருபவனே !
கருணை இதயத்தைக் கொண்டவனே !
களங்கம் இல்லாதத் தூயவனே !
வருணன் கண்ணாக இருப்பவனே !
வானவர் தலைவனாய் சிறப்பவனே !
கர்ணன் தந்தையே ! கண்மணியே!
கமலமலர் ஏந்தும் விண்மணியே !
Chorus:
போற்றி ! போற்றி ! போற்றி !
ஆதி தேவனே போற்றி !
போற்றி ! போற்றி ! போற்றி !
ஜோதி ரூபனே ! போற்றி !
3)
கார்த்திகை நட்சத்ர அதிபதியே !
காயத்ரி மந்திரம் உன் துதியே !
கார்ப்புச் சுவையனே ! ஆதவனே !
காலை, மாலையாய் ஒளிர்பவனே !
பார் இதைக் காக்கும் காவலனே !
பாலை நிலங்களின் கோமகனே !
சீர்மிகும் ராமனுன் பெருவம்சம்!
ஸ்ரீவிஷ்ணு பகவான் திருஅம்சம் !
Chorus:
போற்றி ! போற்றி ! போற்றி !
ஆதி தேவனே போற்றி !
போற்றி ! போற்றி ! போற்றி !
ஜோதி ரூபனே ! போற்றி !
4)
ஒன்றே உலகில் என்றுஆனவா !
இரண்டு பொழுதிலே ஒளிரும் ஆண்டவா !
மூன்று கண்ணனின் வலக்கண் ஆனவா !
நான்கு மறைகளும் போற்றும் பாஸ்கரா !
ஐந்தாம் இடத்தில் ஆக்கம் தருபவா !
ஆறு பருவங்கள் ஆக்கித் தருபவா !
ஏழு குதிரையின் தேரில் வருபவா !
எட்டு ஆதித்யர் வடிவம் ஆனவா !
Chorus:
போற்றி ! போற்றி ! போற்றி !
ஆதி தேவனே போற்றி !
போற்றி ! போற்றி ! போற்றி !
ஜோதி ரூபனே ! போற்றி !
5)
மன்னன் என்றாக்கும் யோகம் தருபவா!
மந்திரச் சொல்லில் உருவமானவா!
உண்ணும் தான்யங்கள் மண்ணில் வளர்ப்பவா!
உக்ரமூர்த்தியாய் ரூபம் கொண்டவா
மின்னும் விண்மீன்கள் தலைவனானவா!
மூன்று கோணங்கள் கோலம் கொண்டவா
கண்ணில் ஒளியாகி பார்வை தருபவா
கண்டியூரிலே வணங்கித் தொழுதவா!
Chorus:
போற்றி ! போற்றி ! போற்றி !
ஆதி தேவனே போற்றி !
போற்றி ! போற்றி ! போற்றி !
ஜோதி ரூபனே ! போற்றி !
6)
காலக் கணக்கனாய் வேலை செய்பவா !
கிழக்கு திசைதோன்றி நாளை செய்பவா !
ஞாலம் இயக்கிடும் கோள்களின் தலைவா !
ஞாயிற்றுக் கிழமை நாளின் நாயகா!
நீல வானிலே பவனி வருபவா!
நீதி காத்திடும் நடுநிலை நாதா !
மூலக் காரணா ! உலகம் உய்யநீ !
மூன்று மூர்த்தியர் அம்ச தெய்வம்நீ
Chorus:
போற்றி ! போற்றி ! போற்றி !
ஆதி தேவனே போற்றி !
போற்றி ! போற்றி ! போற்றி !
ஜோதி ரூபனே ! போற்றி !
7)
சூரியனார் கோயிலில் உறைவோனே !
சூலம் மேற்காய் செய்வோனே !
வீரிய ஆற்றலைக் கொண்டவனே !
வீசும் கிரணங்கள் கீற்றோனே !
கோரிய யாவையும் தருவோனே !
கோதுமைப் ப்ரியனே ! ரவிகுலமே !
சீரிய ஞானம் தந்திடுவாய் !
சிந்தனை வளத்தினை பெருக்கிடுவாய் !
Chorus:
போற்றி ! போற்றி ! போற்றி !
ஆதி தேவனே போற்றி !
போற்றி ! போற்றி ! போற்றி !
ஜோதி ரூபனே ! போற்றி !
8)
செந்நிறக் குடையினைக் கொண்டவனே !
செந்தா மரைமலர் கொண்டவனே !
செந்நிற மேனியோன் ! பெம்மானே !
செம்மலர்ப் பிரியனே ! செஞ்சுடரே !
நன்னிலம் அருளும் ஆண்டவனே !
நளா யினிக்கு அருள்பவனே !
தன்னிகர் இல்லா நாயகனே !
தாமிர உலோக நற்பலனே !
Chorus:
போற்றி ! போற்றி ! போற்றி !
ஆதி தேவனே போற்றி !
போற்றி ! போற்றி ! போற்றி !
ஜோதி ரூபனே ! போற்றி !
9)
சாயாதேவியின் துணையவனே !
சௌரமதத்தின் நாயகனே !
மாயா உலகின் சாட்சியனே !
மார்த் தாண்டன் எனும் பெயரினனே !
தீயாய் ஜொலித்திடும் தினகரனே !
தீராப் பகையை அழிப்பவனே !
நோயால் தவிப்போர் மருத்துவனே !
நீளா யுள்தரும் மகத்துவனே !
Chorus:
போற்றி ! போற்றி ! போற்றி !
ஆதி தேவனே போற்றி !
போற்றி ! போற்றி ! போற்றி !
ஜோதி ரூபனே ! போற்றி !
10)
சங்க ராந்தியின் நாயகனே !
சனி பகவானின் தந்தையனே !
தங்க மயமாக ஒளிர்பவனே !
தர்ம தலைவனாய் திகழ்பவனே !
சிங்கக் கொடியோனே ! சத்தியனே !
சம்பன் கொடும்பிணி தீர்த்தவனே!
மங்கலம் யாவும் தந்திடுவாய் !
மனவளம் ஓங்கிடச் செய்திடுவாய் !
Chorus:
போற்றி ! போற்றி ! போற்றி !
ஆதி தேவனே போற்றி !
போற்றி ! போற்றி ! போற்றி !
ஜோதி ரூபனே ! போற்றி !
11)
உத்திர நாதனே ! உத்தமனே !
ஊழ்வினை தீர்ப்பாய் ! உக்கிரனே !
உத்திரட்டாதி முதற் பாதா !
உஷாதேவியின் உயிர் நாதா !
சித்திரை நாயகன் ஆனவனே !
சிம்ம ராசியின் அதிபதியே !
புத்தொளிச் சுடரே ! பிரபாகரா !
புகழ்மிக ஓங்கும் திவாகரா !
Chorus:
போற்றி ! போற்றி ! போற்றி !
ஆதி தேவனே போற்றி !
போற்றி ! போற்றி ! போற்றி !
ஜோதி ரூபனே ! போற்றி !
12)
“அர்க்கன்” என்னும் பெயரோனே !
ஆரோக்யத்தை தருபவனே !
“அர்க்யம்” ஏற்றிடும் ஆதவனே !
ஆதி தேவனே ! ரவியோனே !
எருக்கு சமித்தனே ! யோகினனே !
எங்கும் நிறைந்தாய் பூரணனே !
செருக்கினை அழிக்கும் ருத்திரனே !
சுயம் ப்ரகாச வடிவினனே!
Chorus:
போற்றி ! போற்றி ! போற்றி !
ஆதி தேவனே போற்றி !
போற்றி ! போற்றி ! போற்றி !
ஜோதி ரூபனே ! போற்றி !
13)
சந்திரனுக்கொளியினைத் தருபவனே !
சஞ்சாரங்கள் செய்பவனே !
இந்திரன், தேவர்கள் தொழுபவனே !
இஷ்வாகு அரசின் ராஜ்ஜியமே !
குந்திக்கு பேரருள் செய்தவனே !
குறைகள் யாவையும் தீர்ப்பவனே !
வந்திக்கின்றோம் உன்பதத்தை!
வாழ்விப்பாயே வையகத்தை !
Chorus:
போற்றி ! போற்றி ! போற்றி !
ஆதி தேவனே போற்றி !
போற்றி ! போற்றி ! போற்றி !
ஜோதி ரூபனே ! போற்றி !
மேகநாதரைத் தொழுதவனே !
மேகங்கள் நடுவே நகர்பவனே !
தேகநலன் யாவும் தந்திடுவாய் !
தெளிவுப் பார்வையைத் தந்திடுவாய் !
Chorus:
போற்றி ! போற்றி ! போற்றி !
ஆதி தேவனே போற்றி !
போற்றி ! போற்றி ! போற்றி !
ஜோதி ரூபனே ! போற்றி !