psdprasad-music.com

புதிய தமிழ் பக்தி பாடல்கள் !

Experience the divine through sacred music and devotional lyrics

சுந்தர காண்டம் பாராயணம்

🕉️


Youtube link

சுந்தர காண்டம்…பாராயணம்…
செய்திடச் சேர்ந்திடும் சௌபாக்கியம் ! (2)
வந்தனம் செய்து சொல்லிடுவோம் !
வானர தேவனின் திருநாமம் (2)
அனுமனின் பதமே சரணாகதம் !-பக்த
அனுமனின் பதமே சரணாகதம் !

சரணம் – 1
———————-

அனுமனே நாயகனாய்
அமைந்ததோர் காண்டம் !
அறுபத்து எட்டுநாள்
படித்திட வேண்டும் ! (2)
அனுதினம் அனுமனை அன்புடன் பணிவதால்…
ஸ்ரீராமனும் மனமுவுந்து  வாழ்த்திடுவான் -வாழ்வில்
சேமங்கள் சூழ்ந்திடவே அருள்தருவான் !

(சுந்தர)

சரணம் – 2
——————-
அஷ்டம சனியில்
கஷ்டங்கள் படுவோர்
இஷ்டமாய் படிக்க…
கஷ்டங்கள் தீருமே ! (2)
“கண்டேன் சீதையை !” என்பது போலவே…- நல்லத்
தகவல்கள் வாழ்விலே தொடர்ந்திடுமே ! – செய்யும்
காரியம் யாவிலும் ஜெயமாகுமே !

(சுந்தர)-