ஸ்ரீ மகா பெரியவா அதிஷ்டான தரிசனம்

அதிஷ்டான தரிசனம் என் பாக்கியம்…பெரியவா..
அதிஷ்டான தரிசனம் என் பாக்கியம்…-அவர்
அனுக்ரகம் பெற்றதால் சௌபாக்யம்…பெரியவா..
அதிஷ்டான தரிசனம் என் பாக்கியம்…-அவர்
அனுக்ரகம் பெற்றதால் சௌபாக்யம்…
அதிகாலை பாடினேன் சுப்ரபாதம் (2) – எந்தன்
அகமுருகத் தொழுதேனே மலர் பாதம்..
அதிஷ்டான தரிசனம் என் பாக்கியம்…- பெரியவா..
அதிஷ்டான தரிசனம் என் பாக்கியம்…
சரணம் 1
—–
மெய்யுருகச் செய்திடும் சன்னிதானம்..
கை தொழவே கண்களிலே நீர் ப்ரவாகம்.. (2)
கண்ணாரக் கண்டேனே ஆரத்தி தீபம்..(2)
நெஞ்சாரப் பெருகியதே ஆனந்தம்..!
அதிஷ்டான தரிசனம் என் பாக்கியம்…பெரியவா..
அதிஷ்டான தரிசனம் என் பாக்கியம்…-அவர்
அனுக்ரகம் பெற்றதால் சௌபாக்யம்…
சரணம் 2
—–
தத்துவமாய் சொல்லியதோ அத்வைதம்
தன்னைத் தந்து வளர்த்ததுவோ நால் வேதம் ! (2)
அவதாரம் செய்து வந்த ஆதி சிவம் (2)
அவதரிக்க நாம்செய்தோம் என்ன தவம்?
அதிஷ்டான தரிசனம் என் பாக்கியம்…பெரியவா..
அதிஷ்டான தரிசனம் என் பாக்கியம்…-அவர்
அனுக்ரகம் பெற்றதால் சௌபாக்யம்…