மஹா சிவராத்திரி – 2019

பிட்டுக்கு மண்சுமந்த ஆண்டவா ! – எந்தன்
பாட்டுக்குப் பண்சுமக்க வேண்டுமே !
பிரம்படி வலி பொறுத்த பரமனே ! – எந்தன்
பாட்டுக்கு அடி எடுத்துத் தரணுமே !
(பிட்டுக்கு மண்)
மன்னவன் சந்தேகம் தீர்த்திடும் பாட்டை…
எளியவன் தருமிக்கு எழுதியே கொடுத்தாய் !
சின்னவன் எனக்கு…ஆயுள் வரைக்கும்…
உன்பதம் தனைப்பாடும் வல்லமை அருள்வாய் !
(பிட்டுக்கு மண்)
நாற்கவி நான்பாடும் பணியினை எனக்கு…
போற்றியே பணித்தருள்வாய் நாகேந்திரனே !
செந்தமிழ் தனிலே…உன்புகழ் பாடிடும்…
சிந்தனை நிறைந்தோட…இக்கணம் அருள்வாய் !
(பிட்டுக்கு மண்)