சிவன் கோயில் செல்வோம் !
சிவன் கோயில் தேடி, தமிழ்வேதம் பாடி..
சிவமார்க்கம் வளர்த்தாரே, தவசீலர் நால்வர் ! (2)
திருக்கோயில் சென்று, லிங்கத்தின் முன்பு (2)
தொழுவோர்கள் தொடர்கின்ற வினையாவும் வெல்வர் !
தலம் தோறும் ஈசன், விளையாடல் கேட்க (2)
உளம் யாவும் மெழுகாக ஆனந்தம் கொள்வர் !
சிவன் கோயில் செல்வோம் ! சிவ நாமம் சொல்வோம் !
பலனாகும் பிறவி…பாவங்கள் நீங்கி…(2)
சரணம் 1
————
சீர்காழி தன்னில் திருசட்டை நாதர்
நடராஜனாக…தென் தில்லை நாதர்.(2)
திருநாரையூரில் திருசௌந்தர நாதர்.. (2)
திருவேதிகுடியில் வாழைமடு நாதர்
திருமீயச்சூரில் திருமேக நாதர்… (2)
திருக்கருகாவூரில் முல்லைவன நாதர்
திருக்கோடிகாவில் திருக்கோடி நாதர்
சிவன் நாமம் கோடி…சிவன் கோயில் கோடி..
மனமார வேண்ட…மகிழ்வாகும் வாழ்வு..(2)
சரணம் 2
————
நாகேஸ் வரத்தில் திருநாக நாதர்
திருக்கோழம்பத்தில் கோழம்ப நாதர் (2)
திருமருகல் தன்னில் ரத்தினகிரீசர் (2)
திருப்பனந் தாளில் அருணஜடேசர்..
திருநின்றியூரில் லட்சுமிபுரீசர் (2)
திருத்தெங்கூர் தன்னில் இரஜதகிரியீசர்
திருப்பூந் துருத்தி புஷ்பவனயீசர்
சிவன் நாமம் கோடி…சிவன் கோயில் கோடி..
மனமார வேண்ட…மகிழ்வாகும் வாழ்வு.. (2)