சக்தி கொடு தாயே !

பாடலைக் கேட்க…
சக்தி கொடு தாயே ! – சிவ
சக்தி தேவியே !
ருத்ரனுடல் பாதியாகி
நின்ற தேவியே ! (2)
அம்பிகையே ! சங்கரியே ! கௌரி மனோகரியே !
(சக்தி கொடு தாயே ! )
(உன்) ஆலயங்கள் படிகள் ஏற பாத சக்தி வேண்டும் ! – உன்
கோலங்களை கண்டிடவே பார்வை சக்தி வேண்டும் ! (2)
கரங்கள் தூக்கி உனை வணங்க கையில் சக்தி வேண்டும் ! (2) – உனை
சிரம் பணிந்து தண்டனிட மெய்யில் சக்தி வேண்டும் ! (2)
(சக்தி கொடு தாயே ! )
கவிபலவாய் புனைந்திடவே ஞான சக்தி வேண்டும் ! – அதில்
உன்புகழைப் பாடிடவே குரலில் சக்தி வேண்டும் ! (2)
உனதடிகள் மறந்திடாத நினைவு சக்தி வேண்டும் ! (2) -உனை
அனுதினமும் போற்றிடவே மனதில் சக்தி வேண்டும் ! (2)
(சக்தி கொடு தாயே ! )