சாயி மகான் கோயில் மணி

Youtube link
சாயி மகான் கோயில் மணி ஒலிக்குது ! – அது
தாய ழைக்கும் தேன்குரலாய்க் கேட்குது…! (2)
அருளை அமுதாய்..அவன் அன்பாய்த் தரவே…
நமை அழைத்தானே மணி ஓசை யாலே ! (2)
கோரஸ்:
சாய் நாமமே…அது ஓங்காரமே !
ஓங்காரமே…மணி ரீங்காரமே ! (2)
சரணம் – 1
——————–
பாபா எனும் அந்தப் பரந்தாமனின்
பண்பினைப் பாடுகின்ற மணியோசையே ! (2)
வலம் வரும் அன்பரை வரம் பெறக் கூப்பிடும்..
பாசம் காட்டுகின்ற மணியோசையே ! (2)
கோரஸ்:
சாய் நாமமே…அது ஓங்காரமே !
ஓங்காரமே…மணி ரீங்காரமே ! (2)
சரணம் – 2
—————–
யாரே கதி என்று தவிப்போர்கெலாம்..
நம்பிக்கை தந்திடும் மணியோசையே ! (2)
நல்லதொரு சேதியை..நல்லவருக் களித்திடும்..
நாதனின் பாஷையாம் மணியோசையே ! (2)
கோரஸ்:
சாய் நாமமே…அது ஓங்காரமே !
ஓங்காரமே…மணி ரீங்காரமே ! (2)
(சாயி மகான் கோயில் மணி )