சாய் தர்பார் !

துவாரக மாயியிலேசாயி தர்பார் ! – அங்கே
சாய்ந்தமர்ந்து அற்புதங்கள் செய்திருப்பார் ! (2)
ஓய்வெடுக்க சாவடிக்கு வந்திருப்பார் ! – அங்கும்
ஓயாமல் அருள்புரிந்து களித்திருப்பார் ! (2)
(துவாரக)
பிட்சையினை வாங்கி வந்து உண்டிருப்பார் ! – ஒரு
பித்தனை போல் கந்தையினை அணிந்திருப்பார் ! (2)
தட்சணையாய் சிறுதொகையைக் கேட்டிருப்பார் – அதைத்
தந்தவரை லட்சங்களில் புரளவைப்பார் ! (2)
(துவாரக)
மாவரைத்து எல்லையிலே வீசவைப்பார் ! – அதை
நோய் தடுக்கும் வேலியென ஆக்கி வைப்பார் ! (2)
பூவெடுத்து பாலையிலே தூவிவைப்பார் ! – அதை
நீர்சுரக்கும் கேணியென மாற்றிவைப்பார் ! (2)
(துவாரக)